ஒரு forward கிளறி விட்ட கற்பனை .....
https://m.facebook.com/story.php?story_fbid=181109000356825&id=101074571619208&sfnsn=scwspwa&d=w&vh=e&funlid=v5GyeFGs5JHEk9he
இந்த மாதிரி ஒரு இன்டெலிஜெண்ட் ஹீரோ சார்....IoT technology-ல பெரிய ஆள் .
அவரோட பொண்ண ஒருத்தன்(வில்லன்) கடத்திடுறான்.
வந்தவன் சரியான கொடூரன் என்பது அவன் விட்டு சென்ற தடயங்கலில் தெரிகிறது . அங்கங்கே ரத்த சுவடு .... ரத்தம் தோய்ந்த முடி கற்றைகள் ...வெற்றிலை எச்சில் துப்பல்கள் ....வீட்டு போட்டோக்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன ....வீட்டு பூஜை அறையில் சிறுநீர் கழித்த சுவடு ...
வெறி கொண்ட ஹீரோ தன்னோட டெக்னாலஜி அறிவை வச்சி வில்லனோட ஸ்பாட்-ட்ட கண்டு பிடிக்கிறார். GPS tracking ...Satellite tracking ...எல்லாம்
ஆனா அங்க அவன் இல்ல.
இதே மாதிரி ஒவ்வொரு வாட்டியும் மிஸ் ஆகுது . ஹீரோ ரொம்ப வெறியாகிறார்.
அவன் வீட்டு கொல்லைப்புற நிலத்தடி கிணத்து மோட்டார் ரூம்ல தான் அடைச்சு இருந்ததுக்கான க்ளூ கிடைக்குது .
கடைசியில அவனோட பக்கத்துக்கு வீட்டுல தான் அடைச்சு வச்சிருக்காங்க .
இதை அவன் தன்னோட எதிர் வீட்டுக்காரர் சொல்லி தான் தெரிஞ்சுகிறார் .
போட்டோ பாத்துட்டு ....'அது உங்க பொண்ணுதானா ...நான் பாத்துருக்கேன். ...நான் கூட நீங்க வீடு மாறிட்டிங்கன்னு நெனச்சேன்....'
இத்தனை நாளா அவர் கம்ப்யூட்டரை வச்சி என்னென்னெமோ டெக்னாலஜி கண்டு பிடிக்கிறார் . ஆனா எதிர் வீட்டு மனுசங்க கிட்ட பேசுனதே இல்ல .
இப்போ பேசுறார் . தன்னோட பொண்ண கண்டுபிடிச்சிட்டார்.!!
(பக்கத்துக்கு வீட்டுக்கும் கிணத்து மோட்டார் ரூமூக்கும் ஒரு பாதை போகுது )
யாரு கடத்தினா ?
Interval Block
யாரும் கடத்தலை ....அப்பா 24 மணி நேரமும் கம்ப்யூட்டர கட்டிக்கிட்டு அழுததுனால சொல்லி சொல்லி பாத்து வெறுப்பான பொண்ணு தன்னோட friends வச்சி ஒரு கொடூர வில்லன் கடத்துனா மாறி செட்டப் பண்ணிட்டு பக்கத்துக்கு வீட்டுல இருந்துகிட்டே தன்னோட அப்பாவ கண்காணிச்சிட்டு இருக்கா .
அவளோட friend-அ ஒரு கொடூரன் கடத்திட்டு போயிட்டான் . கடத்தப்பட்டது ஒரு போலீஸோட பொண்ணுன்றதுனால ஹீரோ கவனம் செலுத்தல. (முன்னாடி இவர் போலீசால் ரொம்ப பாதிக்க பட்டதும் ஒரு காரணம் ) அதனால் தன்னோட பொண்ணு எவ்வளவோ கெஞ்சியும் அவரு சும்மா சமாதானப்படுத்திட்டு தன் வேலையில மூழ்கிடுறார்.
ஆனா அவரோட பொண்ணும் கடத்தப்பட்ட பொண்ணும் ஓருயிர் ஈருடல் .அதனால் இத்தனை ட்ராமா . புலிக்கு பிறந்தது ....அதனால் அது அப்புடிதான் இருக்கும். பொண்ணு so smart . டெக்னாலஜி-ல அப்பாவுக்கு கொஞ்சமும் சளைச்சதில்ல . நாசா குட்டி satellite create பண்ற competition ல ஜெயிச்ச பொண்ணு.
நெனச்சா நெனச்சத அடையிற பொண்ணு. பட் அப்பா பொண்ணு ரெண்டுபேருக்கும் கடவுள் பக்தி ரொம்ப ஜாஸ்தி.
இப்போ அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து அந்த பொண்ண கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறார்கள் .
கண்டுபிடித்தார்களா?....அந்த பெண்ணை கடத்தியது யார்...?
( அங்கங்கே ரத்த சுவடு .... ரத்தம் தோய்ந்த முடி கற்றைகள் ...வெற்றிலை எச்சில் துப்பல்கள் ....வீட்டு போட்டோக்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன ....வீட்டு பூஜை அறையில் சிறுநீர் கழித்த சுவடு ....)
இதுதான் அந்த கொடூரன் விட்டு சென்ற தடயங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக