வயதான கவிதை
நீ நெருப்பு ...நான் மெழுகு... or முரட்டு காளை ...நான் முயலாய் மாறிய அந்த காலை .....! என் வீட்டு தென்னையிலிருந்து தேங்காயை இறக்குவது முதல் 'பரக் பரக் ' என்று காட்டுத்தனமாக மட்டையை உரித்து... இரும்பு கிண்டியால் முரட்டு தனமாக 'டொம் ' 'டொம்' என்று அடித்து உடைத்து வெறித்தனமாக சில்லுகளாக கீறி பிரிஜ்ஜில் வைப்பது வரை .....அடியேன் தான் ...அது போன வாரம் ...முரட்டு சிங்கிளாய் திமிறி திரிந்தவரை ...! நேற்று.... 'உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நெனப்பாவே இருக்கு ' என்று டீசென்ட் ப்ரோபோசல் செய்யுமுன் வரை ... என் டீசென்ட் ப்ரோபோசலை கேட்ட பின் .... மறுநாள் பூராம் கண்ணெல்லாம் சிவந்து... பித்து பிடித்தாற் போல் யாரிடமும் நீ பேசாமல் இருந்ததை கண்டு ...புரியாமல் ...கலங்கி போய் ... 'என்ன ...எதாவது சொல்லு...திட்டணும்னா திட்டிரு ..' - என்றேன் எச்சில் முழுங்கி . நீ சொன்னாய் ....உன் அழகிய கண்களை மலங்க மலங்க விழித்த படி .... ' உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நென...