இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Poco X3 - (1 min short film Script)

ரோட்டு கடை . சூடான மசாலா டீ...  குமாரு கண்ணு திரண்ட கருமேகத்தை மிரட்சியா பாக்க ... வாய் டீ-ய உறிஞ்ச..   நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந் .... " ...என் வாய அடைச்சுட்டான். எதுக்கு பாட வைக்கணும்...அப்புறம் எதுக்கு பாதியிலே நிப்பாட்டனும் " " பாரேன் இவன ....நடு ரோட்ல நின்னுகிட்டு  ஒரு கையால என் இடுப்ப பிடிச்சிக்கிட்டு ...ங்கொய்யால ...இன்னொரு கையால என்ன கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டு ...அவன் wife பாத்துகிட்டே இருக்கு ...மொறைக்குது ...'நடு ரோட்ல கூடவா ' ன்னு திட்டுது ...இந்த பயபுள்ள எதையும் காதுல போட்டுக்கல . அது ..அது வேளையிலே மும்முரமா இருக்கு" !! "அய்யயோ ...என் வயித்துக்கிட்ட வாய கொண்டு வர்றான்...என்னமோ பேசுறான்...சீ...எனக்கு ரொம்ப ஷேம் ஆ இருக்கு ...என்னடா வேணும் உனக்கு கிறுக்கா .." ஆட்டோக்குள்ள வந்துட்டோம்...என்ன பாத்து சிரிக்கிறான்...உதட்டை குவிச்சு உம்மா குடுக்குறான் ...கண்ணடிக்குறான்...பிக்காளி பய  ஆட்டோ விட்டு எறங்குன உடனே சடசட ன்னு மழை .  என்னய தூக்கிட்டு உயிர  வெறுத்து ஓடுறான் ....என் மேல மழை துளி ஒரு சொட்டு...

பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும் Or ஒரு தென்றல் புயலாகி

 பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும்  ஒண்ணு .... எந்த நேரத்துல எப்புடி பேசுவாங்கனு சொல்லவே முடியாது ...  பெங்களூரு வெதரும் உங்க பசங்க மதரும்  கூட ஒண்ணு தான்  .... எந்த  நேரத்துல எப்புடி மாறுவா ன்னு ஒன்னும் சொல்றதுகில்ல  காலையிலே ஈ ன்னு பல்ல  காட்டுத்தேனு லைட் டிரஸ் போட்டு போனா ... நம்ம தொப்பைய புழுஞ்சு  காய போடுற அளவுக்கு நனச்சுவிட்டு போயிட்டே இருக்கும் சரி இவ்வளவு சில்லுன்னு  இருக்கேனு ஸ்வெட்டர் போட்டு போனா பாதி வழியிலே  வேர்க்க ஆரம்பிச்சுரும் . நடு ரோட்ல வண்டிய நிறுத்தி கழட்டவும் முடியாது. அதே தான் இந்த பெண்டாட்டி வகையறாவும் ... மல்லிப்பூ வாங்கிட்டு போலாம்னு போனா .... 'முழம் எவ்ளோ ...?'  நாம ஏதோ வாங்குனத விட ஒரு 20 ரூவா கொறச்சு 70 ரூவா ன்னா அவ்ளோதான் .  '70 ரூபா போட்டு மல்லிப்பூ வாங்குற அளவுக்கு ஆயிடுச்சோ....ஆபீஸ் ல வாங்கி குடுத்து குடுத்து பழக்கம் ஆயிருக்கும் ...' இதென்னடா புது மாய்மாலம் ...அடங்கொப்பா ...இரு  இரு அடுத்த வாட்டி  காயித  பூ வாங்கிட்டு வந்து போடுறேன் .... "என்னாது ....என்ன சொன்னீங்க ?" - முழு...