Poco X3 - (1 min short film Script)
ரோட்டு கடை . சூடான மசாலா டீ... குமாரு கண்ணு திரண்ட கருமேகத்தை மிரட்சியா பாக்க ... வாய் டீ-ய உறிஞ்ச..
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந் ....
" ...என் வாய அடைச்சுட்டான். எதுக்கு பாட வைக்கணும்...அப்புறம் எதுக்கு பாதியிலே நிப்பாட்டனும் "
" பாரேன் இவன ....நடு ரோட்ல நின்னுகிட்டு ஒரு கையால என் இடுப்ப பிடிச்சிக்கிட்டு ...ங்கொய்யால ...இன்னொரு கையால என்ன கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டு ...அவன் wife பாத்துகிட்டே இருக்கு ...மொறைக்குது ...'நடு ரோட்ல கூடவா ' ன்னு திட்டுது ...இந்த பயபுள்ள எதையும் காதுல போட்டுக்கல . அது ..அது வேளையிலே மும்முரமா இருக்கு" !!
"அய்யயோ ...என் வயித்துக்கிட்ட வாய கொண்டு வர்றான்...என்னமோ பேசுறான்...சீ...எனக்கு ரொம்ப ஷேம் ஆ இருக்கு ...என்னடா வேணும் உனக்கு கிறுக்கா .."
ஆட்டோக்குள்ள வந்துட்டோம்...என்ன பாத்து சிரிக்கிறான்...உதட்டை குவிச்சு உம்மா குடுக்குறான் ...கண்ணடிக்குறான்...பிக்காளி பய
ஆட்டோ விட்டு எறங்குன உடனே சடசட ன்னு மழை .
என்னய தூக்கிட்டு உயிர வெறுத்து ஓடுறான் ....என் மேல மழை துளி ஒரு சொட்டு பட்டுர கூடாதுன்னு படாத பாடு படுறான் ...கை வச்சு மறைக்க ட்ரை பண்றான் ...தான் நனைஞ்சாலும் பரவாயில்ல...அவன் wife பத்தி கண்டுக்க கூட இல்ல ...
ஒரு வழியா லிப்ட் புடுச்சு ..வீட்டுக்குள்ள வந்த உடனே அவன் wife -எ திட்டுறான் ....'மழை காலத்துல வெளிய போக வேணாம்னா கேட்டு தொலைக்கிறியா ...?
wife - 'நான் என்ன டூயட் பாடவா கூட்டிட்டு போனேன் ...எங்க அண்ணன் ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கான் ..அவன பாக்க போயிட்டு வர்றோம் ...ஞாபகம் இருக்கில்ல ..' உறுமியது பெண் சிங்கம்.
நோ சவுண்ட் பிரம் அவர் பங்கம் .
வேகமா ரூம் குள்ள வந்து ...ஸ்விட்ச போட்டுட்டு ...டக்குனு எனக்கு இனிமா குடுத்தான் பாருங்க ....அவன் சொருகுறதுக்கும் ' குமார் ...இப்போ போட்றாத ...'ன்னு அவன் wife கத்துறதுக்கும் இடையிலே ஒரு அரை நொடி இருக்கும்-ல ...அந்த அரை நொடியில "டொமார் "னு ஒரு சத்தம் .
எல்லாம் முடிஞ்சு போச்சு ...
அந்த டோமர் குமார் மெதுவா திரும்பி பாக்க ....நான் ...அப்புடியே ....எதிரி முகாம் குள்ள பூந்து சூசைட் ப்ளாஸ்ட் பண்ணிக்கிட்ட கரும்புலியாட்டம் ...சுக்கல் சுக்கலா நான் ... போகோ X3 !! - சுத்தி ஒரே புகை...
வாங்கி ...முழுசா 24 மணிநேரம் ஆகல ...
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
கருத்துகள்
கருத்துரையிடுக