பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும் Or ஒரு தென்றல் புயலாகி

 பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும்  ஒண்ணு ....

எந்த நேரத்துல எப்புடி பேசுவாங்கனு சொல்லவே முடியாது ...

 பெங்களூரு வெதரும் உங்க பசங்க மதரும்  கூட ஒண்ணு தான்  ....

எந்த  நேரத்துல எப்புடி மாறுவா ன்னு ஒன்னும் சொல்றதுகில்ல 

காலையிலே ஈ ன்னு பல்ல  காட்டுத்தேனு லைட் டிரஸ் போட்டு போனா ...

நம்ம தொப்பைய புழுஞ்சு  காய போடுற அளவுக்கு நனச்சுவிட்டு போயிட்டே இருக்கும்

சரி இவ்வளவு சில்லுன்னு  இருக்கேனு ஸ்வெட்டர் போட்டு போனா பாதி வழியிலே  வேர்க்க ஆரம்பிச்சுரும் . நடு ரோட்ல வண்டிய நிறுத்தி கழட்டவும் முடியாது.

அதே தான் இந்த பெண்டாட்டி வகையறாவும் ...

மல்லிப்பூ வாங்கிட்டு போலாம்னு போனா ....

'முழம் எவ்ளோ ...?' 

நாம ஏதோ வாங்குனத விட ஒரு 20 ரூவா கொறச்சு 70 ரூவா ன்னா அவ்ளோதான் . 

'70 ரூபா போட்டு மல்லிப்பூ வாங்குற அளவுக்கு ஆயிடுச்சோ....ஆபீஸ் ல வாங்கி குடுத்து குடுத்து பழக்கம் ஆயிருக்கும் ...'

இதென்னடா புது மாய்மாலம் ...அடங்கொப்பா ...இரு  இரு அடுத்த வாட்டி  காயித  பூ வாங்கிட்டு வந்து போடுறேன் ....

"என்னாது ....என்ன சொன்னீங்க ?" - முழு சந்திரமுகியா மாறி நிப்பா ....

அடங்க ....நமக்குள்ள பேசுறதா நெனச்சு ...சத்தமா பேசிட்டனா ?


இதேது ...அவுங்க நம்ம கூட வரும்போது ....அதே மல்லிப்பூ ...60 ரூபா சொல்லுவான்....அடேங்கப்பா 60ரூவாய்க்கு மல்லிப்பூவா ...நோ..நோ.. கனகாம்பரம் குடுங்க னு சொல்லிட்டு பெருமையா லுக்கு  விட்டா ...அங்க பத்தி எறிஞ்சிட்டு இருக்கும் .  

அது தெரியாம நாம இன்னும் கொஞ்சம் என்னைய ஊத்துவோம் காமெடி-ங்குற பேருல ....

எங்க ஆபீஸ் hr  க்கே  நான் 60 ரூபீஸ் க்கு பூ வாங்கி குடுத்ததில்லையாமா ....

ன்னு சொல்லிட்டு கெக்கெ பிக்கே ன்னு சிரிச்சுட்டு திரும்பி பாத்தா ....

அது பாட்டுக்கு போயிட்டு இருக்கும் ....ஒரு தென்றல் புயலாகி போகுதே -ன்னுட்டு விஜயசாந்தி மாறி...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்