தபூ தங்கத்துக்கு போட்டி
1. காற்றெங்கும் சுகந்தம் உன்னுடன் பேசி விட்டு வந்தது முதல்..... 2. என்னுடன்பேசும்போதும்...பேசிவிட்டு சென்ற பின்னும்...உன் முகம் ஒரு ரியாக்ஷனும் காட்டுவதில்லை....ஆனால் உன் தோழி சொல்லி விட்டாள் ....உன் முகத்தை தவிர மற்ற அனைத்தும் படபடப்புக்கு உள்ளாகிறதென்று ..... 3. என்னிடம் எத்தனை சட்டை பேண்ட் ....என்ன டிசைன் ....கலர் ...ஞாபகத்தில் ஒன்றாது ஒரு நாளும்..... உன்னுடைய பூப்போட்ட பிங்க் சுரிதாரும் ....கட்டம் போட்ட ரோஸ் கலர் சுரிதாரும் முட்டை வடிவ சிவப்பு துப்பட்டாவும் மனப்பாடம் எனக்கு.... நாளை நீ ...பவனி வர யோசிக்கும் சுரிதார் நிறமும் தெரிகிறதெனக்கு ...!! 4. மில்க் ஸ்வீட்சை நாக்கில் போட்டு கசக்கி முழுங்கி...மீண்டும் நாக்குக்கு கொண்டு வந்து சுவைப்பது.... தயிர் சாதத்தில்...கொஞ்சம் பொரித்த நிலக்கடலை ,கொஞ்சம் எண்ணெய் கத்தரிக்காய் ...கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் .....கலந்து கொக்கைன் சாப்பிடுவது போன்ற பாவனையில் சாப்பிடுவது .... பசித்தால் டைரி மில்க்கை உரித்து உள்ளே தள்ளுவது .... கலர் கலராக பென் வைத்து கொண்டு ....நோட்ஸ் எடுப்பது... செல் வைத்து கொள்ளாமல...