தபூ தங்கத்துக்கு போட்டி
1. காற்றெங்கும் சுகந்தம் உன்னுடன் பேசி விட்டு வந்தது முதல்.....
2. என்னுடன்பேசும்போதும்...பேசிவிட்டு சென்ற பின்னும்...உன் முகம் ஒரு ரியாக்ஷனும் காட்டுவதில்லை....ஆனால்
உன் தோழி சொல்லி விட்டாள் ....உன் முகத்தை தவிர மற்ற அனைத்தும்
படபடப்புக்கு உள்ளாகிறதென்று .....
3. என்னிடம் எத்தனை சட்டை பேண்ட் ....என்ன டிசைன் ....கலர் ...ஞாபகத்தில் ஒன்றாது ஒரு நாளும்.....
உன்னுடைய பூப்போட்ட பிங்க் சுரிதாரும் ....கட்டம் போட்ட ரோஸ் கலர் சுரிதாரும் முட்டை வடிவ சிவப்பு துப்பட்டாவும் மனப்பாடம் எனக்கு....
நாளை நீ ...பவனி வர யோசிக்கும் சுரிதார் நிறமும் தெரிகிறதெனக்கு ...!!
4. மில்க் ஸ்வீட்சை நாக்கில் போட்டு கசக்கி முழுங்கி...மீண்டும் நாக்குக்கு கொண்டு வந்து சுவைப்பது....
தயிர் சாதத்தில்...கொஞ்சம் பொரித்த நிலக்கடலை ,கொஞ்சம் எண்ணெய் கத்தரிக்காய் ...கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் .....கலந்து கொக்கைன் சாப்பிடுவது போன்ற பாவனையில் சாப்பிடுவது ....
பசித்தால் டைரி மில்க்கை உரித்து உள்ளே தள்ளுவது ....
கலர் கலராக பென் வைத்து கொண்டு ....நோட்ஸ் எடுப்பது...
செல் வைத்து கொள்ளாமல் என்னை கொல்வது ...
fickle minded ஆக இருப்பது....
ஞாயிற்று கிழமைகளில் சோம்பேறி சோனியாக குளிக்காமல் தலையணையை கட்டி கொண்டு...அந்த தலையணைக்கு என் பேர் வைத்து கொஞ்சுவது ....
ஒரு வாய் இட்லி ...ஒரு வாய் காபி என்று ரசனையாக சாப்பிடுவது ....
என்னுள் உன்னையும் உன்னுள் என்னையும் புதைத்து கொண்டு ...நேரில் பார்க்கும்போது ...'யார் நீ ? உன்னை எங்கியோ பாத்தா மாறி இருக்கே என்பது போல் தெனாவெட்டாக லுக்கு விடுவது...
உன் வயலட் கலர் பேனா மூடியை நான் சுட்டு வைத்திருப்பதும் ....என் ப்ளூ கலர் பேனா மூடியை நீ உன் பர்ஸுக்குள் பத்திர படுத்தி வைத்திருப்பதும் ...
எனக்கு பிறந்தநாள் பரிசாக 4000 ரூபாய்க்கு காப்பு வாங்கி கொடுக்க வீட்டில்
ஸ்பெஷல் பீஸ் என்று நீ உன் வீட்டில் ஊழல் செய்ததும் ....உனக்கு மயில் டிசைன் செயின் வாங்கி கொடுக்க நான் 5000 ரூபாய் ஆட்டையை போட்டதும்.....
பார் ...இப்போதே உனக்கும் எனக்கும் 10 பொருத்தம் ஆயி போச்சு ..!!
5. காற்றை கோபமாக்கடி ....
உனக்கும் எனக்கும் இடையில் நிகழ வேண்டிய பல கொண்டாட்ட குதூகலங்களில் இதுவும் ஒன்று....
மாலை மயங்கும் நேரம்...வானம் மப்பும் மந்தரமுமாக இருக்கும் ஒரு குளிர் வேளையில்.....நீயும் நானும் பைக் ல் ...நகரத்தின் வெளியில் ....நம் இருவர் காதிலும் ..ஹெட் செட் .உன் காதில் ஒன்று..என் காதில் ஒன்று.......அம்மாடி அம்மாடி...பாட்டை ஒலிக்க விட்டு ...100 ஸ்பீட் ல் பறக்கும் வேளையில் ....காற்று உனக்கும் எனக்கும் இடையில் புக முயன்று ....தோற்று ....கோபமாக வேண்டும்.....
உன்னின் ஹார்மோன் வேகம் முன் காற்றின் வேகம் தோற்று ஓட வேண்டும்...!!!
6. 'போடி...எல்லாம் உன்னால தான்...!'
இளவெயில் காபியின் சுவையை நாவிலும்....
இளமயில் உன்னை காண போகும் குஷியை நெஞ்சிலும் ...மிதக்க விட்டு கொண்டே....
பைக் சாவியை எடுத்து பையில் போட்டு கொண்டு ....
புன்னகை ததும்ப பயணித்து ஒரு வளைவில் ...சிக்னலாக கைகாட்டி திரும்ப முயலும்போதுதான் ....
குறும்பு சிறுவனின் குரல் ....'அம்மா அங்க பாரேன்....நடக்கும் போதுகூட சிக்னல் கட்டிட்டு போகுது 'ஒரு லூசு '...!
திக்கென்றானது ...வழிந்து சிரித்து கொண்டேன்...என்னை
திட்டி கொண்டேன்...பின் உன்னையும்....
'போடி...எல்லாம் உன்னால தான்...!'
Written on 2005 June
கருத்துகள்
கருத்துரையிடுக