Why should I ? - ATTITUDE -எனக்கென்ன வந்துச்சு ?


நாம ஏன் இன்னும் ஊழல் பண்ற ஆளுங்களால ஆள படுறோம் தெரியுமா ?

அமெரிக்கா-விட பணப்புழக்கம் இருந்தும் கூட்ட நெரிசல் பஸ் ல சிக்கி ஏன் சாவுறோம் தெரியுமா ?

 இந்தியா ஏன் இன்னும் மொன்னையாவே இருக்கு தெரியுமா ?

ஒரே விடை தான் :    எனக்கென்ன வந்துச்சு ? நான் ஏன் பண்ணனும் ?

Why should I ? - ATTITUDE  

காலை  9 மணி. ஒரு நல்ல விஷயம் நீங்க பண்றீங்க. ஒரு கார் காரன் வழி விட்டா ஒரு கைய தூக்கி ஹை தேங்க்ஸ் -அப்படினு சைகை செஞ்சு பாருங்க. 

மாலை 7 மணி . வீட்டுக்கு வர்றவரைக்கும் இப்படி தேங்க்ஸ் சொல்லி பாருங்க 

உங்கள பாத்து 10 பேரு அதேத செய்வான். அந்த 10 , 100 ஆகும் அது 10000 ஆகும் . அது 10000000 கோடி ஆகும் . ஒரே நாள்ல ஆவாது பட் கூடிய சீக்கிரம் ஆவும்.

அதேது , கலங்காத்தாலே , அதே கார்காரனுக்கு வழி விடாம முந்திட்டு போங்க (காரோ பைக்கோ ஆட்டோவோ )அவன் அன்னிக்கு பூராம் வேற எவனுக்கும் வழி விட மாட்டான் ) Domino's Effect

நாம எல்லோருக்கும் ஒரு ஹீரோ , நம்மள இந்த லஞ்ச ஊழல்ல இருந்து காப்பாத்த வரணும். நாமளும் ஹீரோவா ஆக மாட்டோம், ஆனா ஹீரோ-வா முளை விடுறவன சப்போர்ட்டும்  பண்ணமாட்டோம் .

பண்ணாம வேடிக்கை பாப்போம்.   

இந்த டிஸ்கவரி நாட் ஜியோ -ல ஒரு சிங்கம் குரல்வளைய கடிக்க மரண ஓலம் இடும் ...ஓராயிரம் மாடுக வேடிக்கை பார்க்கும் .   1000 ல ஒண்ணுக்கு கோவம் வந்துச்சு...சிங்கம் அதோ கதி  தான் ...ஆனா அந்த கோவம் எப்போவாவது தான் வரும் .

நாமளும் அதே மாறிதான் . ஒருத்தன் பாதிக்க பட்டா moral சப்போர்ட் பண்ணனும். நாம பண்ணி என்ன ஆக போவுது , நாம என்ன செய்ய முடியும்னு  இருந்துட்டா .....?

இந்தாளு -சவுக்கு சங்கர் ஒரு விதை - தண்ணி ஊத்தி காப்பாத்தி மரமா ...மிகப்பெரிய விருட்சமா மாத்துறது பப்ளிக் -நெட்டிசன்ஸ் - நம்ம கைல தானே இருக்கு ?

 ஒருத்தன் ஊழலுக்கு எதிரா பேசுனா , தேமே ன்னு எருமையாட்டம் வேடிக்கை பாத்துட்டு போகாம  Why should I attitude ? -அவன் பேசுனத பாராட்டி கமெண்ட் போடுங்க , குரூப்ஸ் க்கு  எல்லாம் forward பண்ணுங்க .  நாம கமெண்ட் போட்டு  என்ன ஆக போகுதுன்னு நினைக்காதீங்க . 

அது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்