43- ல் ஒரு 143 with a 420 !!
Situation: Hero got love and break up after his 40's
43- ல் ஒரு 143... ஒரு 420 யோடு
அது ஒரு ரணம் ...
அது ஆறு சொல்லொணா துயரம் ...
அது ஒரு ஆத்ம பரிசோதனை ...
தாங்குவதற்கு கல் மனம் வேண்டும் ..!
Style -ஆக சொல்ல வேண்டும் என்றால் - Break Up!!
ஒரு ஆணுக்கு எப்போதும் ஒரு பெண் மன/ண ம் தேவைப்படுகிறது !
அது மறுக்கப்படும்போது ...
கனமாகி போகின்றது ...
பிடுங்கப்படும்போது சினமாகிறது ...
நீடிக்கையில் ரணமாகி ...பின் நடை பிணமாகி திரிகின்றது ..!
அவனுள் இருக்கும் யாழியை சீண்டி பார்க்கிறது !
நகர வாழ்க்கையில் 'I just Broke up' என்று கடந்து போகப்படுவது ....
வில்லேஜ் வாழ்க்கையில் 'வைதேகி காத்திருந்தாள்' விஜயகாந்த்-தாக 'உடைத்து ' உட்கார்த்திவிட்டு விடுகிறது.
எங்கூரில் அதன் பெயர் 'காதல் தோல்வி ' ...
உண்மையில் அது ஒரு காதல் வேள்வி தான் ...மீண்டு வந்தோர் மிகச்சிலரே!!
முன்தினம் காலை வரை பூங்காவனம் போல் இருந்த மொபைல் ...
இப்போது பாலைவனம் போல் ....
கல்யாணம் முடிந்த கல்யாண மண்டபம் போல் ...
முதலிரவு முடிந்த மல்லிகை போல ...
குளத்தில் வீசப்பட்ட விநாயகர் சதுர்த்தி சிலைபோல ....கேட்பாரற்று ...
களை இழந்து கிடக்கிறது...
போன் அடித்தவுடன் விழுந்தடித்து ஓடி போய் மூச்சு வாங்கி 'ஹலோ...?!' என்றால் ...
நிலைமை புரியாமல் ...பெர்சனல் லோன் காரிகளின் ... பசப்பும் கொஞ்சல் பேச்சு...'குஷி' பட மும்தாஜ் கவர்ச்சி குரலில் 'ப்ளீஸ் ...எடுத்துக்கோங்க சார் ...வாங்கிக்கோங்க சார் ...எனக்காக ...ப்ளீஸ்..மன்த் எண்ட் டார்கெட் சார் '.
முன்னே வெட்க சிரிப்பை வரவழைத்த பேச்சு ...இப்போது வெறி ஏற்றுகிறது .
ரோஜாவை கண்டவுடன் வண்டாக மாறும் வாயில் இப்போது 'போடீப் ...' வண்டை வண்டையாக வருகிறது .
லோன் பணத்திற்கு பதில் உன் மனம் எவ்வளவு என்று சொல் ...எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல ...வாங்குறோம் ...அஞ்சு வாங்குறோம் என்று 'நாயகன்' கமலாய் - கத்தி விட துடித்து பின் அடங்குகிறேன்.
'கால் பண்ண வேண்டாம் ...நானே கூப்பிடுறேன் ' - என்ற மாய பேச்சை வேத வாக்காக மதித்து ..பல்லை கடித்துக்கொண்டு 24 மணி நேரத்தை கடந்த பின்பே ...தெரிந்தது உன் சதி திட்டம் ..!
சதிகாரி ...எல்லா வழிகளையும் மூடி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டிருந்தாய் ..மொபைல், வாட்ஸப் ,மெயில் அனைத்தும் அணைத்து வைத்துவிட்டு மாயமாய் மறைந்து விட்டிருந்தாய் ..!
24 மணிநேரத்தை கடந்த எனக்கு ...
உன் நினைவுகளையும்...கொஞ்சல் பேச்சுக்களையும் கடக்க முடியவில்லை ...!
தண்ணி , ஆங்கில படம் இரண்டும் குடித்தும் அடித்தும் பார்த்து விட்டேன் ...
போதையே இல்லை...ராஜ போதை-யில் மயங்கியவனுக்கு இதெல்லாம் எப்படி பத்தும் ?
உன் பேச்சுக்கு நிகரான ஒரு போதை தான் தேவை...!
உன் க்ளுக் சிரிப்பும் ...கள்ளமில்லா பேச்சும் ( செருப்பால அடி -களவாணி சிறுக்கி ...என்னமா நைசா கழட்டி விட்டுட்டு போயிருக்கா ...? கள்ளமில்லா நொள்ள மில்லா ன்னுட்டு ...)
ஸாரி கைஸ் ...என் மனசாட்சி தான் ...அப்பப்போ கத்துவான் ...கண்டுக்காதீங்க ! (All brackets)
கண்ணே
...கலைமானே ...என்று கொஞ்சும் வயதை கடந்துவிட்டிருந்தாலும் அப்படி
கொஞ்சும்போது தான் நான் என் வயதை கடந்து விட்டிருந்தேன் ...கொஞ்சலுக்கு வயதேது !!
கொஞ்சும் பொருளை விட கொஞ்சப்படும் பொருளுக்கு போதை அதிகமே..! நீ கொஞ்சலாக திட்டும்போது கண்டுபிடித்தது !! (மானங்கெட்ட பயலே)
ஒரு தாய் தன் குழந்தையை கொஞ்சுவது போல ... ( அடங்கொப்பா )
ஒரு தகப்பன் தன் சின்னச்சிறு மகளை கெஞ்சுவது போல ...
நினைத்து
பார்த்தால் நான் தான் கள்ளமில்லாமல் ரசித்து அன்பை பொழிந்து
இருக்கின்றேன் .....( லூசு மாறி கம்ப்ளீட் சரண்டர் ஆயிட்டு பேச்ச பாரு...)
தசாப்தங்களுக்கு பின்...ஒரு சிறிய வசந்தத்தை சுவாசிக்க செய்து விட்டு ...மூச்சு திணற விட்டு - விட்டு சென்றாயே ...ஏன் ?!
இத்தனை வருட வாழ்க்கை வீண் என்று காட்டி விட்டு ...வீணாக போனாயே ..ஏன் ?
தலை ' விண் விண் ' என்று தெறிக்கிறது !!!
Win-Win Situation என்று அடிக்கடி சொல்வாயே ...அது இதுதானா ?
தூங்காமல் புரண்டு ...
உண்ணாமல் வறண்டு ...
வெளியுலகை கண்டு மிரண்டு ...
அம்மா அப்பாவின் அழுகையில் அரண்டு ...
சண்டி குதிரையாய் என் மனம்...
நீதான் ...நீ மட்டும் தான் வேண்டும் என்றும் வறட்டு வீம்பு பிடிக்கிறது !!
உன் கலகல பேச்சு...ரகசிய கிசு கிசு பேச்சு...போலி (?) ரவுடி மிரட்டல் பேச்சு
...அத்தனையும் ரசித்து சிரித்து ....
உன் பேச்சு...உன் அன்பு...உன் குரல் இது மட்டுமே நான் அனுபவித்தது...இது மட்டுமே போதும் என்றே இருந்தனன் .
ஒரு தொடுதல் இல்லை .
தூரம் ஒரு பாரமாக இருந்தாலும் ....
உன் 'என்ன சார் ...இன்னிக்கு ரொம்ப குஷியா இருக்கீங்க போல ?' - என்ற ஒற்றை வார்த்தை அதை ..அந்த பாரத்தை .. தூரத்தே தான் வைத்திருந்தது .
வயதை மறந்து மீண்டும் வாலிபனானேன் .உடம்பின் சர்க்கரை மனதிற்கு தொத்தி கொண்டதோ ? ( டேய் டயாபடீஸ் வாயா ...இதெல்லாம் உனக்கு தேவையா ...உன் உடம்பு தாங்குமா ?)
கடவுள் மட்டுமே கொடுக்கும் சில வரங்களை காதலும் கொடுக்கும்... காதல் மட்டுமே கொடுக்கும் ...என்று தெரிந்து கொண்டேன்.?
'இது தான் வாழ்க்கையா ?' என்று இருந்த எனக்கு
'ஆஹா ...இது தான் வாழ்க்கை ..!!' என்று காட்டிவிட்டு
'ஐயோ ..இதுக்கு பேர் தான் வாழ்க்கையா ?' என்றுபுலம்ப விட்டுவிட்டு ...
உன்னை நினைத்து புலம்புவது கூட ஒரு சுகம் தானோ ?
பக்கம் பக்கமாக எனது மனக்காயத்தின் பக்குகளை எழுத்துக்களாய் காகிதத்தில் தூவும்போது ...
நீயே என் பக்கமாக உன் நாடியை என் தோளில் புதைத்து கொண்டு படித்துபார்த்து கிண்டல் செய்து ரசிப்பது போல தெரிவது பக்கா பிரமை என்று இந்த ஃபக்கருக்கு புரிவதில்லை இன்னும்.
இன்னும் கூட பக்குவம் அடையவில்லை இந்த பக்கி !!
கொலை , கொள்ளை மட்டும் தான் கடும் குற்றமா ? (இந்தா வந்துட்டாருப்பா 'பராசக்தி' சிவாஜி )
- மடையர்கள் - வெளி உலக நாகரீகம் அடைந்த அளவிற்கு உள்ளுலக நாகரீகம் அடையாத நாகர்கள் காலத்து நாதாரிகள் ...நம் சட்டங்களை போட்ட முன்னோர்கள் !
எனது பிஞ்சு மனதை கொள்ளை அடித்து விட்டு ....பின் அதை பிரேக்அப் - அல்லது துரோகம் எனும் கொடிய ஆயுதத்தால் கொலையும் செய்துவிட்டு ..ஊருக்குள் உலாவரும் அவளை தண்டிக்க ஒரு சட்டம் கூட இல்லையா?
என்னங்க சார் உங்க சட்டம் ??
சட்டம் இயற்றிய அம்பேத்கருக்கும் மற்ற சட்ட மேதை என்று சொல்லி கொள்பவர்களுக்கும் காதலே வரவில்லையா ?
காதல் வந்திருக்கும் ....காதல் தோல்வி வந்திருக்காது ...அதனால் அவர்களுக்கு அதன் வலி புரிய நியாயமில்லை ...
அது ஆணுலுகமல்லவா ...?
ஆணாதிக்கம் கூட இப்போது 'ஆண்டவன் ஆதிக்கம்' போலும் என்று எண்ண தோன்றுகிறது . இருந்திருக்கலாம்.
இந்த பொண்ணுகளின் சுதந்திரம் , உரிமை எல்லாம் என் போன்ற வாயில்லா பூச்சிக்கு எவ்வளவு கொடூர தண்டனை கொடுத்தாலும் அது வெளியே தெரிவதில்லை .
தெரிந்தாலும் சிரிப்பான்கள் . பெமினிசம் பேசும் நாஸிஸ்ட் .
வெட்கம் கெட்டவன்கள் . அவளை போலவே...வெட்கம் கெட்டவன்கள் .....
முன்பாவது நண்பர்களிடம் சொல்லி புண்பட்ட மனதை பீர் விட்டு ஆற்றி கொள்ளலாம் ...
இப்போதோ கேட்டால் சிரிக்கும் ....அந்த நண்-பன்றிகள்..!
வயதான வெள்ளைக்காரன் காதல் பண்ணலாம் , காமம் பண்ணலாம் ...நான் பண்ணினால் அது காமெடி,வெட்கக்கேடு ?? ம்.. வெட்கக்கேடு !!
43 வயதில் ஒரு காதல் , அந்த எழவுக்கு ஒரு பிரேக் அப் வேறா ? என்று
அங்கிளுக்கும் ஆன்டிக்கும் லவ்-ஆ என்று...
இவன் பரவாயில்லை ....6 மாதம் முன்பு அம்மா வீட்டிற்கு கோபித்துக்கொண்டு போன என் பெண்டாட்டிக்கு தெரிந்தால் ....
'ஆன்டிக்கும் ஆண்டிக்கும் லவ் ஆ ?' என்று கேட்டு இன்னும் ரணமாக்குவாள் .
(பாத்தீங்களா ...married uncle ...சோ வாட் ...ஹோட்டல் அதிபருக்கும் 3 வேளை பசிக்கும் தானே ?)
'பெண்கள்.. என் டீனேஜ்-லும் நடு வயதிலும் ஒரே மாறி தான் மச்சி இருக்காங்க ...ஏமாத்துக்காரிங்க -
'அவளுங்க பல யுகங்களா ஒரே மாறி தாண்டா இருக்காங்க ....நீ தான் ஹேண்டில் பண்ண தெரியாம ஏமாந்து போற...
'ஆமா மச்சி...இந்த கிருஷ்ணன் மட்டும் எப்டி அத்தனை பொண்ணுங்களையும் சுத்த விட்டு வேடிக்கை பார்த்தான் ...'
அவன் -' ஏன்னா அப்போ ராதைங்களும் ருக்மணிகளும் MNC கம்பெனிஸ்- ல வேலை செய்யவும் இல்ல...அவுங்க கையில மொபைல் சோசியல் மீடியாவும் இல்ல..!' - நல்ல லாஜிக் தான் .
காதல் வரும்போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக வருகிறது ...போகும்போது அடித்து துவைத்து திண்டாடவிட்டு சென்று விடுகிறது .
எல்லாம் டோபமைன் படுத்தும்பாடு ...
பேசாமல் இன்சுலின் போட்டுக்கொள்வது போல ...டோபமைன் போட்டு கொண்டால் என்ன ?
மனம் வெறிகொண்டு அரற்றுகையில் ...பேனாவை எடுத்து இப்படி கிறுக்கி தள்ளும்போது சிறிது ஆறுதல்...
காதல் தருமிக்கு சற்று இளைப்பாறுதல் தரும் தரு. ( Mr .தருமி போதும் உங்கள் பொருமல் ...முடியல )
'குத்துங்க எசமான் குத்துங்க...இந்த பொண்ணுங்களே இப்புடிதான் ' டயலாக்கை வைத்து நாங்கள் பண்ணாத காமெடியே இல்லை . விழுந்து விழுந்து ரசித்து சிரிப்போம்.
ஆனால் ... அது இப்போது ஒரு வாழ்க்கை தத்துவமாக தெரிகிறது !
(Omg..Dangerous pellow..!)
கருத்துகள்
கருத்துரையிடுக