LEO Doubts

I Love LEO - First time. Verithanam. But மக்களே 2nd டைம் லியோ-வ பாத்தீங்க....வேணாம்...அப்புறம் என்னை மாறியே கேள்வி கேட்டு உங்களுக்குள்ளே பேசிகிட்டு 'ங்கெ ங்கெ'-ன்னு காதல் பரத் மாறி வீடு போயி சேர மாட்டீங்க 1. ஒரே கேள்வி தான் . விஜய் த்ரிஷா கிட்ட கதறி அழுவார் 'என்ன நம்பாம என்னை கொன்னுட்டியே-ன்னு ...இதுவரைக்கும் அவரு இப்புடி கதறுனதே இல்லேங்குற லெவெலுக்கு கதறுவாரு ! அப்படியே கிளைமாக்ஸ் சீனுக்கு வாங்க ...'ஹே ...நான் தாண்டா லியோ ' ன்னுட்டு போயிட்டே இருப்பாரு....! இன்னா மாமு லோகேஷ் ...இன்னா இதெல்லாம் ? 2. டைரக்டர் எமோஷனலா கனெக்ட் ஆகாம ஸ்கிரிப்ட் பண்ணா ரசிகர்கள் எப்டி connect ஆவாங்க ? இன்டெர்வல் வரைக்கும் படம் விர்-ன்னு விரையும் ...அதற்கப்புறம் விரையம் தான் 3. சில சீன்கள்ல எதுக்கு இப்போ இந்த ட்ராமா ன்னு நாம confuse ஆயிடுறோம்....

1. நம்ம கைதி போலீஸ திட்டுற சீன் 2. த்ரிஷா கிட்ட அழுற ஸீன் 3. 5 பேர சுட்டுபுட்டு கே -ன்னு அழுற ஸீன் 4. ஒரு முன்னோட்டம் எதுவும் இல்லாம திடீர்னு நம்ம மடோனா செபாஸ்டியன ட்வின்ஸ் ன்னு காட்றது ....அப்புறம் நரபலி ன்னு அந்தம்மாவ அப்புடியே சாவடிச்சு கட் பண்ணி விட்டுறது .
(யாரோ ஹெவி ரெகமெண்டஷன் போல ...ஒரே ஒரு நாள் கால்ஷீட் கூட ஓகே. பட் அவுங்க படத்துல இருக்கணும் அப்புடின்னு சொன்னா மாறியே இருந்துச்சு அவுங்க ஸீன் ......... லியோ-க்கா ஹூக்குமா ?) 5. சூப்பர் சீன்ஸ் - ஹயீனா ஸீன் + கார் chase ( namma thala ப்ளூ சட்டை கண்றாவி ன்னு திட்டுச்சே ...Paavam..அதுக்கு வயசு ஆயிடுச்சி ..கொஞ்சம் fast-aa எதுனா செஞ்சா ...கடுப்பாயி நம்மள செஞ்சுவிட்ருது ..அந்த ஸீன் தான் )+ Bird Eye view Camera -fight inside Tobacco factory 6. Picturize yourself - அந்த கேள்விக்கு என்ன விடை ..?? 7. சஞ்சய் தத் எதுக்காக திரும்ப விஜய் -ய கூட்டிட்டு போக ஆசை படுறாரு ?? ...எதாவது லாஜிக் இருக்கா? "லியோ-ன்னு ஒத்துக்கோ.. ஒத்துக்கோ "-ன்னு ஒப்பாரி வைக்கிறார் . சரி ஒத்துக்கிட்டா ...கொலை பண்ணிருவாரா ...இல்ல கூட்டிட்டு போயி கொஞ்சுவாரா ? லியோ பைய்யன (பேரனை )எதுக்கு கடத்திட்டு போறாரு.. பலி கொடுக்கவா ? அதே தேதி ன்னு சொல்றாரு ...ஓகே...So பலி கொடுக்கத்தான்...பேரனை தேடி கண்டு பிடிச்சு பலி குடுக்குற தாத்தா-வா ? 8. ஆமா ...A history of Violence ல அந்த ஹீரோ soft . So கொலை பண்ணிட்டு பயப்படலாம் . இங்க நம்ம ஹீரோ லியோ தாஸ் தான் பாஸ்ட்-ல பெரிய டான் ஆச்சே . கணக்கே இல்லாம கொலை செஞ்சவரு (அவரோட ஸ்டேட்மென்ட் தான் to his dad சஞ்சய் தத் ) ....அவரு எதுக்கு 5 பேர கொன்னுட்டு... 1. கதறணும் 2. எதுக்கு தண்ணி ட்ராப் சத்தம் கேட்டா கூட பதறி எந்திருக்கனும் . புள்ள குட்டி மேல பயம்னா அவுங்கள தான வீட்டுல பூட்டி வைக்கிறாமாரி காட்டி இருக்கனும் ..? அத விட்டுட்டு ..இவரே பெரிய டான் . அப்புறம் எதுக்கு அவரு பயந்து பத்து நாள் வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடைக்கணும் ...? மொதல்ல A history of Violence சீன்ஸ் எடுத்துட்டீங்க ... கொலை பண்ணிட்டு பயப்படுற ஹீரோ .அப்புறமா தமிழுக்கு பாட்சா லெவெலுக்கு ஒரு பிளாஷ் பேக் வேணும். எடுத்துட்டீங்க .. மொத்தமா சேத்து பெசஞ்சு எங்களுக்கு ஊட்டி விட்டுடீங்க ...எங்களுக்கு digest ஆவலை .... ரெண்டையும் மிக்ஸ் பண்ணி எடுத்து நீங்களும் confuse ஆயி ...எங்க சட்டையையும் கிழிச்சுக்க வச்சுடீங்க ...? 9. அந்த ஹயீனா ஸீன் கிளைமாக்ஸ் - ஹயீனா -வ கொல்றது ...or ..சரி காயப்படுத்தி கட்டு படுத்துறது ...நம்புறா மாரியா இருக்கு. ? இவ்ளோ யோசிச்சீங்க இதையும் கொஞ்சம் நம்புறா மாறி எடுத்திருக்கலாம் . 10. ஆமா ...பிரியா ஆனந்த் யாரு...? என்ன ரிலேஷன் ? இந்த மாறி இன்னும் 10 கேள்வி இருக்கு !! மண்டை காயுது ...ச்சே ...இந்த இழவுக்கு தான் FDFS அதுவும் விஜய் படம்லாம் பாக்கப்புடாது-ன்றது !!

11 .ஆமா ...அந்த காபி ஷாப் நெத்தி-யிலே நெத்தி சூடி யாட்டம் ஒருத்தன நம்ம சஞ்சய் தத் தொங்க விட்ருப்பாரே ...அது எதுக்கு ? அவரு அவுங்காளு தானே...அதுவுமில்லாம அவரு 'உன்ன பாத்துட்டேன் அது போதும்-னு சந்தோசமா தானே சொல்லுவாரு' -எனக்குதான் புரியலையா ? என்ன எழவோ ? யாராவது explain பண்ணுங்கப்பா - STILL ...I LOVE LEO !!!


 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்