சின்ன சிந்தனை சின்னமனூர் பிரசன்னா ;-)

ஒரு சிறு சிந்தனை .  இது அண்ணனின் பார்வேர்ட்-க்கான  ரிப்ளை-யாக (மட்டும்)கருத தேவை இல்லை .இதோடு புதிய கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது .

இது-இந்த சிறுமி காணாமல் போனது - தற்போது நடந்திருக்கலாம் . அல்லது நீண்ட நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் .

ஆனால் இது போல் செய்தி போடுபவர் (ஆரம்பித்து வைப்பவர் ) மற்றும் பார்வேர்ட் செய்பவர்கள் தேதி மற்றும் நேரத்தை மறக்காமல் குறிப்பிடவும் . 

பிறர்க்கு உடனடியாக உதவும் நல்ல உள்ளம் காரணமாக பதற்றத்தில் தேதி குறிப்பிட மறந்து விடுகிறோம்.  காரணம் ....உடனடியாக  உதவ வரிந்து கட்டி இறங்கும்  பதற்றம்.  தன்னலமற்ற புண்ணியவான்கள் .  கண்டிப்பாக கயிலையில் இடமுண்டு .சிவாய !!

ஆனால்  அது என்னவாகிறது எனில் ...இந்த 'காணாமல் போன..' செய்தி இரண்டு வருடமோ அதற்கு மேலுமோ சுற்றிக்கொண்டிருக்கும் .

நான் பார்வ்ர்ட் செய்வதற்கு முன் இத்தகைய செய்திகளில் இருக்கும் போன் நம்பர்-க்கு  கால் செய்து உறுதி செய்து கொள்வேன்.  ஏனெனில் நான் அனுப்பும் ஒவ்வொரு குரூப்-பிலும் குறைந்த பட்சம் 500 பேர் இருப்பார்கள். 

நானும் குறைந்த பட்சம் 20 குரூப்-களுக்கு  அனுப்பி விடுவேன் . அதாவது 10000 பேர்களுக்கு . அத்தனை பேரின் நேரமும் நம்மின் ஒரு சிறிய முன்னெச்சரிக்கை செயலால் மிச்சப்படும்.

 ஒருமுறை அவ்வாறு போன் செய்து கேட்ட பொழுது ...அந்த பையன் 6-வது படிக்கும்போது காணாமல் போய் 2 நாளில் வந்துவிட்டதாகவும் , இப்போது 9-வது படித்து கொண்டிருக்கிறான் என்றும், தினமும் என்னைப்போல் முன்னெச்சரிக்கை முத்தண்ணா யாராவது ஒருவர் 'பையன் வந்துட்டானா ?" என கேள்விகேட்டு கடுப்பேற்றுவதாகவும் ....வேதனை பட்டார். (முதல் 100 முறை  பொறுமை இருக்கும் ...101 -வது முறை ...?   )

 ...சிரிப்பும் தவிப்பும் சேர்ந்தே வந்தது.

நாம் செய்ய வேண்டியது :  உங்களுக்கு இது போல் -'காணாமல் போன ..' 'விபத்து நடந்த ...' போன்ற குறுஞ்செய்தி வரும்போது உங்களுக்கு அதை அனுப்பியவரிடம் அதன் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு மீண்டும் அனுப்ப சொல்லுங்கள் . இல்லையெனில் 'அனுப்ப முடியாததற்கு மன்னிப்பு' கேட்டுவிட்டு  ...விட்டு விடுங்கள். அது அனுப்பியவரை யோசிக்க வைக்கும் . யோசித்து பின் அவரும் அதையே செய்யக்கூடும்        ( தேவைப்பட்டால்  கருணை அடிப்படையில் பார்வேர்ட் பண்ணி கொள்ளலாம்  ) 

 இது தற்போதைக்கு  சிறிய  விஷயமாக தோன்றினாலும் நாளடைவில் எல்லோருக்குமே பதற்றத்தில் அனுப்பினாலும் கூட 'தேதி ,நேரம்'  குறிப்பிட்டே அனுப்புவது  பழக்கமாகிவிடும். 

ஒரு சிறு பழக்கத்தை உண்டு பண்ணவே  இந்த பெரு விளக்கம் .

நீண்ட நாள் மனப்பொருமல் - கொட்டிவிட்டேன் - தவறு எனில் பொறுத்தருளறுக 🙏🙏 சின்ன சிந்தனை  சின்னமனூர் பிரசன்னா ;-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்