சுத்தமாய் சுட்ட காலை
அந்த ஓர் நாள் காலை ....அது காலை அல்ல என் வாழ்நாள் வசந்தங்களின் சுடுகாட்டு சாலை ... என்னை ஈர்த்தவளை முதல்நாள் தாரை வார்த்து விட்டு ... தாரை தாரை யாய் கண்ணீர் காய்ந்த காலை ... ஒவ்வொரு காலையும் 'வானம் எனக்கொரு போதி மரம் ..'என்று மனம் குதூகலிக்க ...குருவிகளின் குய் குய் ஓசையோடு விழித்த ...எனக்கு நரகத்தில் வந்து விழுந்து விட்டோமோ என்று யோசிக்க வைத்த காலை. மிதமான வெயில்...இதுவரை பூங்காற்றாய் காற்றில் காதலை மிதக்கவிட்ட மித வெயில்...அன்று அம்மணமாய் பாலைவனத்தில் படுத்திருப்பது போல உணர செய்த காலை .. எனது மன இறப்பு ... தெரியாமல் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏதோ என்னிடம் கேட்க ...அவர்கள் பேசுவது காதில் விழுகிறது . ஆனால் மொழி உள்செல்ல வில்லை . ஒலி ஏற்கிறது காது ...மொழி ஏற்கவில்லை மனது . வெறித்து வெறித்து பார்க்கிறேன். அவ்வளவுதான். சிறிது காலத்தில் 7ஜி ரிலீஸ் ஆன பின்னே தான் எனக்கு புரிந்தது.. எனக்கு மட்டுமல்ல ...மனம் 'தவறி 'போன ஆண்கள் எல்லோரும் இப்படி பிறழ் நிலை அடைகிறார்கள் என்று...