Unpay சிவம் படம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன? #அன்பே சிவம், படத்தை பற்றி நிறைய எழுத இருப்பதால் முன்னுரை எதுவும் இல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம். அன்பே சிவம் படம் நிறைய தத்துவங்களை பேசும் படம் Communism Atheism Capitalism Globalization கடவுள் னா என்ன? வாழ்க்கை னா என்ன? என பல விடயங்களை விவாதிக்கும் படம் அன்பே சிவம். அன்புதான் கடவுள், அன்பை காட்டும் மக்கள் தான் என கமல் கதை, திரைக்கதை எழுதி விவரித்த படம் தான் அன்பே சிவம். -1- டைட்டில் கார்டு போடும்போது உலகம் உருவாகும் அமைப்பையும், மூலக்கூறுகளையும் காட்டி பின்னர் சிவன் உருவத்தில் கடவுள் மற்றும் ஆண், பெண் குறியீடுகளை காட்டி டைட்டில் கார்டு அன்பே சிவம் என்று தோன்றும். அன்பே சிவம் என்ற எழுத்தின் பக்கத்தில் புள்ளிக்கு (.) பதிலாக கமா (,) போடப்பட்டிருக்கும். அன்பிற்கு எல்லை இல்லை என்பதனை டைட்டிலே சொல்லி விடுகிறார் கமல். கமலின் பெயர் நல்ல சிவம் மாதவனின் பெயர் அன்பு அரசு.. மாதவனின் முதல் பெயரையும் கமலின் இரண்டாவது பெயரையும் சேர்த்து படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. -2- நாத்திகம் மற்றும் கம்மியூனிஸத்தை க...