இடுகைகள்

Poco X3 - (1 min short film Script)

ரோட்டு கடை . சூடான மசாலா டீ...  குமாரு கண்ணு திரண்ட கருமேகத்தை மிரட்சியா பாக்க ... வாய் டீ-ய உறிஞ்ச..   நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந் .... " ...என் வாய அடைச்சுட்டான். எதுக்கு பாட வைக்கணும்...அப்புறம் எதுக்கு பாதியிலே நிப்பாட்டனும் " " பாரேன் இவன ....நடு ரோட்ல நின்னுகிட்டு  ஒரு கையால என் இடுப்ப பிடிச்சிக்கிட்டு ...ங்கொய்யால ...இன்னொரு கையால என்ன கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டு ...அவன் wife பாத்துகிட்டே இருக்கு ...மொறைக்குது ...'நடு ரோட்ல கூடவா ' ன்னு திட்டுது ...இந்த பயபுள்ள எதையும் காதுல போட்டுக்கல . அது ..அது வேளையிலே மும்முரமா இருக்கு" !! "அய்யயோ ...என் வயித்துக்கிட்ட வாய கொண்டு வர்றான்...என்னமோ பேசுறான்...சீ...எனக்கு ரொம்ப ஷேம் ஆ இருக்கு ...என்னடா வேணும் உனக்கு கிறுக்கா .." ஆட்டோக்குள்ள வந்துட்டோம்...என்ன பாத்து சிரிக்கிறான்...உதட்டை குவிச்சு உம்மா குடுக்குறான் ...கண்ணடிக்குறான்...பிக்காளி பய  ஆட்டோ விட்டு எறங்குன உடனே சடசட ன்னு மழை .  என்னய தூக்கிட்டு உயிர  வெறுத்து ஓடுறான் ....என் மேல மழை துளி ஒரு சொட்டு...

பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும் Or ஒரு தென்றல் புயலாகி

 பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும்  ஒண்ணு .... எந்த நேரத்துல எப்புடி பேசுவாங்கனு சொல்லவே முடியாது ...  பெங்களூரு வெதரும் உங்க பசங்க மதரும்  கூட ஒண்ணு தான்  .... எந்த  நேரத்துல எப்புடி மாறுவா ன்னு ஒன்னும் சொல்றதுகில்ல  காலையிலே ஈ ன்னு பல்ல  காட்டுத்தேனு லைட் டிரஸ் போட்டு போனா ... நம்ம தொப்பைய புழுஞ்சு  காய போடுற அளவுக்கு நனச்சுவிட்டு போயிட்டே இருக்கும் சரி இவ்வளவு சில்லுன்னு  இருக்கேனு ஸ்வெட்டர் போட்டு போனா பாதி வழியிலே  வேர்க்க ஆரம்பிச்சுரும் . நடு ரோட்ல வண்டிய நிறுத்தி கழட்டவும் முடியாது. அதே தான் இந்த பெண்டாட்டி வகையறாவும் ... மல்லிப்பூ வாங்கிட்டு போலாம்னு போனா .... 'முழம் எவ்ளோ ...?'  நாம ஏதோ வாங்குனத விட ஒரு 20 ரூவா கொறச்சு 70 ரூவா ன்னா அவ்ளோதான் .  '70 ரூபா போட்டு மல்லிப்பூ வாங்குற அளவுக்கு ஆயிடுச்சோ....ஆபீஸ் ல வாங்கி குடுத்து குடுத்து பழக்கம் ஆயிருக்கும் ...' இதென்னடா புது மாய்மாலம் ...அடங்கொப்பா ...இரு  இரு அடுத்த வாட்டி  காயித  பூ வாங்கிட்டு வந்து போடுறேன் .... "என்னாது ....என்ன சொன்னீங்க ?" - முழு...

மொக்கையா ஒரு bird கவிதை....Know about few birds atleast

 இன்று எனது  வாட்ஸப் தோட்டத்திற்கு என்ன ஆயிற்று ...? குயில்களின் குக்கூவை காணவில்லை .... கரையும் காகத்தையொத்த  கரண்டிவாயனை யும் காணவில்லை....   குறும்பு கொண்டலாத்தி -யாக காட்டிக்கொள்ளும் குண்டுக் கரிச்சானை யும் காணவில்லை .... அரசியல் சண்டையிடும் அரிவாள் மூக்கனை யும்  அண்டரண்டப்பறவை யையும் காணவில்லை ஆமா போடும் அக்கா குருவி யையும் காணவில்லை  கிளி என்று காட்டிக்கொள்ளும் கோரை உள்ளான் னையும் காணவில்லை ...! செண்பக -த்தையும் கொடிக்கால் வாலாட்டி -யையும் காணவில்லை   அடைமழைக்கு அடங்கி கிடக்கும் அனைத்தும் .... ஞாயிற்றின் ஞாயிற்று  ஒளிக்கற்றை சுருக்கென உள்வாங்கி சுறுசுறுப்பாக கூவ வாழ்த்துகள் !! (Don't compare the features of the Birds with you...just for rhythm its used....)

சீமான் சார்பாக ;-0

   https://www.facebook.com/1290406477741270/posts/3501151546666741/  வரிசை படி பதில் :  சீமான் சார்பாக  அவரின்  ஒரு தம்பி-யின் பதில்   ....   1. உருது-ல பேர் வைக்கலாம். அதில் தமிழ் சேர்த்து வைக்கணும் -என்பதே எங்கள் கோரிக்கை. முஸ்லிம் கள்கிட்டே கோத்து விட பாக்குது கோமியம்.  2. அட வெங்காயம் ....பனம்பால்  என்ன தான் நல்லது ன்னாலும்... அளவுக்கு மீறினால் அவை போதை தரும் .  எவ்ளோ நல்லதுனாலும் மது வகை என்பதால் அப்படி கோரிக்கை வைக்கிறோம் .  கோயில் அருகே வைக்க வேண்டியதுதானே .... கோயில் அருகே வச்சு?....கோமியத்துக்கு பதிலா அத குடிச்சுட்டு ...கோயிலுக்கு போற வார பொண்ணுங்க கைய புடிச்சு இழுக்க ...அடிங் ....!!  3. அந்தம்மாவ விட வெயில் ஒன்னும் கெட்டது  செஞ்சிருக்காது தம்பி.  4. இந்திய மொதலாளி சேவைக்கு வருவானோ இல்லியோ ...நீங்க வெளிநாட்டு முதலாளிக்கு தானேப்பா சப்போர்ட் பண்ணுவீங்க. or  அவன் சாப்பிடுறதுக்கு இந்திய முதலாளி சாப்பிட்டு போறான். or  வெளிநாட்டு முதலாளிய சொன்னா உங்களுக்கு ஏம்பு பொத்துக்கிட்டு வருது...? சொல்லு !! 5...

போர்வைக்-குள்ளிருந்து

படம்
  போர்வைக்-குள்ளிருந்து தூக்கி போட்டு துள்ளி எழுந்தால் கனவை துரத்த போகிறாய்- என்று அர்த்தம் அதே  போர்வை வெளியிலிருந்து இழுக்கப்பட்டு துள்ளி எழுந்தால் ...நீ வீட்டை விட்டு துரத்த பட போகிறாய் என்று அர்த்தம் . - மீ ...இட்ஸ் மீ.  -------------------------------------------------------------------------   நான் இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று ஏங்கினேன். மின் தடைகளிலிருந்து, தூங்கும்போது காதைச் சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களிடமிருந்து, இரண்டு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதிலிருந்து, மழை பெய்யும்போதெல்லாம் நீரில் மிதக்கும் வீட்டிலிருந்து விடுதலையை விரும்பினேன். என் பெற்றோரும் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்தார்கள்தான், ஆனால் அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது – அப்பா வண்டியை இழுக்கும் கூலி வேலை செய்பவர், அம்மா வீடுகளில் வேலை செய்பவர். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஹாக்கி அகாதமி இருந்தது. எனவே, அங்கே பயிற்சி பெறுவதைப் பார்ப்பதிலேயே பல மணிநேரம் செலவு செய்வேன். எனக்கும் விளையாட ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு தினக்கூலி 80 ரூபாய்தான், ஹாக்கி மட்டை வாங்கும் அளவு...

மாப்ள ...காதல் கொட்டை-னு சூப்பர் படம் ஒன்னு..

 அடங்கப்பா ...காதல் கோட்டை படம் வந்து 25 years  celebrate பண்றானுங்க . நமக்கெல்லாம் அம்புட்டு வயசு ஆச்சா ? I still remember those evergreen days with budding moustache...College first year student...initial days of college...just entered into the dream world ... மாப்ள ...காதல் கொட்டை-னு சூப்பர் படம் ஒன்னு வந்துருக்கு ...இப்போ தான் போஸ்டர் பாத்தேன் -ன்னான் . My mind started racaing....டைட்டில் பயங்கர வித்யாசமா இருக்கே ....How come such a title he can select ? Is it a spoof movie or some kind of adult movie ?  Only one guy ..who entered into the classroom informed to all the other guys. So all thought its Kaadhal Ko-ttai only.  All are intimidated  with that title. Most of us smirked gently. What a title ? இன்னா டைட்டில் டா இது ? After the last period, when we got out of the college, on seeing the POSTER...all started cracking up in unison...in the middle of the road.  கெக்கே பிக்கே ....All started searching for that Tamil poet...who double backed and disapp...

வயதான கவிதை

படம்
  நீ நெருப்பு ...நான் மெழுகு...   or  முரட்டு காளை  ...நான் முயலாய் மாறிய அந்த காலை .....!       என் வீட்டு தென்னையிலிருந்து  தேங்காயை இறக்குவது முதல்  'பரக் பரக் ' என்று காட்டுத்தனமாக மட்டையை உரித்து...  இரும்பு கிண்டியால் முரட்டு தனமாக 'டொம் ' 'டொம்' என்று அடித்து உடைத்து வெறித்தனமாக சில்லுகளாக கீறி பிரிஜ்ஜில் வைப்பது வரை .....அடியேன் தான் ...அது போன வாரம் ...முரட்டு சிங்கிளாய் திமிறி திரிந்தவரை ...!   நேற்று....  'உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நெனப்பாவே இருக்கு ' என்று டீசென்ட் ப்ரோபோசல் செய்யுமுன் வரை ...    என் டீசென்ட் ப்ரோபோசலை கேட்ட பின் .... மறுநாள் பூராம்  கண்ணெல்லாம் சிவந்து... பித்து பிடித்தாற் போல் யாரிடமும் நீ பேசாமல் இருந்ததை கண்டு ...புரியாமல் ...கலங்கி போய்  ... 'என்ன ...எதாவது சொல்லு...திட்டணும்னா திட்டிரு ..'  - என்றேன்  எச்சில் முழுங்கி .   நீ சொன்னாய் ....உன் அழகிய கண்களை மலங்க மலங்க விழித்த படி ....    ' உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நென...