இடுகைகள்

பசங்க 2 - Pasanga 2- review

தாரே ஜமீன் பர் -பரோட்டா - கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி...பிச்சு போட்டு ... பசங்க  2 -  கொத்து  பரோட்டா தாரே ஜமீன் பர் - ஒரு குட்டி பொடியன் + Dyslexia  + அமீர் கான் பசங்க 2    -  ரெண்டு குட்டி பசங்க + Hyper  active + அமலா பால் ,சூர்யா ; அம்புட்டுதேன் . ஸ்கூல் இன்டெர்வியு -ல அந்த பாப்பா சொல்ற உட்டாலக்கடி ராமாயண கதை படம் ரிலீஸ் -க்கு ரொம்ப முன்னாடியே whatsapp-ல் உலா வந்த கதை அதுல பண்ற முக்கால்வாசி விஷயங்கள் இப்போ தமிழ்நாட்டுல நெறைய  வீட்ல பண்றாங்க . நான் 10th படிக்கும்போது எங்க pregnant  அக்கா  வயித்துகிட்டே உக்காந்து நிறைய பேசுவேன். songs  போட்டு விடுவேன். என்ன ஒரு மாதிரி பாப்பாய்ங்க . இப்போ சூர்யா பண்ணுனா கை தட்ரானுங்க ....! இந்த உலகமே இப்புடித்தான் ...  

கும்ப கர்ணன் -ஒரு giant கிடையாது

படம்
Zoe Saldana -  இந்த அக்கா பேரு...யாருன்னு தெரியுதா ...ஒன்லி movie  buffs களுக்கு மட்டும் தான் தெரியும். அவதார் படத்துல புலி மாதிரி உர்ர்ர்....உர்ர்ருனு உறுமி ஹீரோ-வ காப்பாத்துவாங்களே ....அ'வால்' தான் இவா .   அவதார் - 2  2017  அவதார் -3   2018   அவதார் - 4  2019 ரிலீஸ் பிளான் பண்ணிட்டா..!  கும்ப கர்ணன் ஒரு giant கிடையாது ....actually அது ஒரு    AMP - யாம்  suit in Avatar movie .( The Amplified Mobility Platform)  இன்னும் வரும்....

Tharai Thappattai review -தாரை தப்பட்டை விமர்சனம்

தாரை தப்பட்டை : வழக்கமான பாலா படம். விளிம்பு நிலை மனிதர்கள் , அழிந்து வரும் கரகாட்ட கலை. சசிகுமார் வழக்கம்போல் . சூறாவளி ...யப்பா நிஜமாவே சூறாவளிதான் . வரலெட்சுமி தான் மேன் of the மேட்ச் .வரலெட்சுமிகாக ஒன் மோர் பாக்கலாம். சாமிப் புலவன் (ஜி.எம்.குமார்) அதே அவன் இவன் பாணி கேரக்டர் மற்றும் நடிப்பு.  அதில் நொடிந்து போன ஜமீன் . இதில் நொடிந்து போன வித்துவான். முன்னாடி எடுத்த 3 படங்களை மிக்ஸ் பண்ணி போட்டு ஒரு ஹாட் சாலட் . தியேட்டரில் எழுந்து ஆட வேண்டும் என்பதற்காகவே குத்து பாட்டுக்கள் மியூசிக் . அதற்குள் அவர்களின் வாழ்க்கை சோகம் . அதை அவர்கள் காமெடி-யாக எப்படி  எடுத்து கொண்டு நாட்களை கழிக்கிறார்கள் என்று 'நான் கடவுள்' பாணி . எப்படி ஹீரோயின் ஹீரோவை காதல் torture பண்ணி கவுத்த பார்க்கிறாள் என்று 'பரதேசி' பாணி. கடைசி சண்டை அப்படியே 'நான் கடவுள்' குரூரம். அதே பாணி . அதே இசை கூட.அவனாவது அகோரி. குரூரம் சரி . இவன் சாதாரண வித்துவான். இவன் எப்படி...இவனுக்கு எப்படி இத்தனை குரூரம். வில்லன் வழக்கம் போல மகா கொடூரம் . நான் கடவுள் , அவன் இவன்  வில்லன் போல . வழக்...

அன்பே தவம்..!

1. மனம் முழுவதும் வெறுப்பு  வந்தவர் எப்படி இருப்பார் ?               சிடு சிடு வென்று ..... 2. ஏன்  (இவ்வளவு வெறுப்பு ) ?              கனவு , ஆசை நிறைவேறவில்லை . 3. ஏன் ( நிறைவேற வில்லை) ?              போதிய முயற்சி எடுக்க வில்லை . 90% இதுதான் காரணம் . ஆனால் நாம் நம்ப மாட்டோம். நம்ப பிடிக்காது .             விரும்பிய வாழ்க்கை கிடைக்க வில்லை - காதல் கைகூடவில்லை, கல்வி கைகூடவில்லை , ஆரோக்கியம் கைகூடவில்லை (இயற்கை ). 4. ஏன் ( முயற்சி எடுக்க வில்லை ) ?              நமது/எனது  கட்டுபாட்டில் இல்லை . அதனால். உதாரணம் உங்க லவ்வர்  உங்கள கழட்டி விட்டுட்டாங்க . இத எப்புடி எனது முயற்சி இல்லேன்னு சொல்ல முடியும். Correct . ஆனா 100% அவங்கள அடைய நீங்க முயற்சி பண்ணீங்களா ? இல்ல அந்த கழுதைய மனசுல இருந்து கழுத்த புடிச்சி வெளிய தள்ளிட்டு இன்னொரு லவ் முயற்சி பண்ணுணீங்களா?   ச்சீ ..ச்சீ ...நான் கற்பு ...

நேனே ஷைலஜா - தெலுஙூ

உங்களுக்கு சுச்சா வருது.  ஆனா வெளிய சொல்லமாட்டீங்க ...... லவ் வருது . ஆனா வெளிய சொல்லமாட்டீங்க .... ஏன்னா உங்க சுபாவம் அப்புடி. இந்த ஒரு லைன் வச்சு ஒரு அழகான மூவி . நேனே  ஷைலஜா - தெலுஙூ ....தெலுங்கு-ன்னு சொன்னா தெலு ங்கு friends க்கு கோவம் வரும்.  ஏன்னா without லு இட்ஸ்  எ பேட் வேர்ட் . படம் பூரா கீர்த்தி சுரேஷ-வே பாத்துகிட்டு .....எனக்கு நானே வெக்க பட்டுக்கிட்டுருந்தா ...? திடீர்னு  ஸ்க்ரீன்-ல 'directed by 'ன்னு வந்த உடனே  ...கொஞ்சம் ஷாக்-கா  தானே இருக்கும். அது மொக்கையா இருந்தாலும் போர் அடிக்காதுல்ல. 'மனம் கொத்தி பறவை' -  ஆத்மியா அக்கா மாறியே ....இருக்காங்க ..! ஒரு படம் பார்த்துட்டு வெளியே வந்தா அந்த பாதிப்பு வெளியே வந்த பின்னும் இருக்கணும். பாக்குற பன்னாடைகள பொன்னாடை போத்தி உள்ளுக்குள்ள இழுத்து போட்றனும் . அது படம் . பாத்துட்டு  வெளிய வந்த பின்னாடியும் ...தின்ன புல்ல கக்கி அசை போடுமே பசுமாடு   ....செட்டிநாட்டு ஆப்பம் ...சாப்ட்டு முடிச்சு 2 மணி நேரம் கழிச்சும் oesophagus-ல ஒரு taste ...

பூலோகம் - சிறுபெண்ணின் முதல் பூகோலம்

அழுத்தம் பத்தல . கோவம் ...வெறி ...பகை ....எதுக்குமே...! ஹரி படம் , சத்யராஜ் நடிப்பு ....இதிலெல்லாம் ஒரு உப்பு , ஒரு மிளகாய் எப்போவுமே ஜாஸ்தி இருக்கும். பட் இந்த பூலோகத்துல ...எல்லாமே சப்பு.  ஜனநாதன் வசனம் மட்டும் இல்ல....பானைய கவுதிருப்பானுங்க ...!  அடுப்ப அமத்திருப்பானுங்க ...! தப்பிச்சீங்க கல்யாண் ..! த்ரிஷா ....பாவம் அந்த அக்கா ...பச்சை குத்தி ...அப்புறம் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. Mayweather டான்ஸ் ஆடுனா உங்களுக்கு  என்ன சார் ? காமெடி சீன் ஆயி போச்சி ...! கைய தூக்கு-ங்க சீனும் காமெடி ஆயித்து...!

ஜெய் சங்கர் அசத்தும் Star wars:The force awakens

ஜெய் சங்கர் அசத்தும் Star wars:The Force Awakens-ன்னுதான் போடணும் . இவ்வோளோ காசு செலவு பண்ணி அப்பா பையன்  செண்டிமெண்ட் , காதல் கத்திரிக்காய் ன்னு காமிச்சா....digest ஆவல . Titanic  கூட தான் ....காதல் காமிச்சார் cameron . அது எப்புடி கலக்குச்சு. இது பழைய காலத்து ஜெய்சங்கர்  தான். இல்ல சட்டம் என் கையில் கமல் movie . Spectre தான் அசல்  ஜெய் சங்கர் படம் .....வில்லன பூராம் கூறுகெட்ட கும்மாங்கோ-வாவே காட்ட வேண்டியது . 'ஹான்ட்ஸ் அப் 'ன்னு  சொல்லிட்டு இங்கிட்டு திரும்பி கத பேச வேண்டியது. அத நம்ம பாண்டு தட்டி விட வேண்டியது .இதுக்கு எது பாண்டு ....எங்க ஊரு புளியங்கா திருடி பாண்டி போதுமே.....குச்சிய வச்சு சுப்பரா தட்டுவான் புளிய மரத்த...அம்புட்டு புளி கொட்டும். பேசாம Daniel Craig-எ  புளி  தட்ட அனுப்பிரலாம் . காசுக்கு புடிச்ச கேடு ....last  blast கின்னஸ் ரெகார்ட் வேறயாம். துணிவே துணை கூட இன்னும் ரெண்டு வாட்டி பாக்கலாம்.