டீ குடிங்க ...யோசிங்க
டீ குடிங்க ...யோசிங்க " ...எல்லாம் இந்த காசு வாங்கிட்டு ஓட்டு போடுற @##$பசங்க-னாலதான் " - எந்த சோசியல் மீடியாக்கடை , டீக்கடை பாத்தாலும் இந்த ஆற்றாமை வாக்கியத்தை கேக்கலாம். 500 ரூவா காசு வாங்கிட்டு ஓட்டு போடுற அவனுக்கு அந்த 500 ரூவா அவ்வளவு பெருசு. உங்களுக்கு கம்மி. ஏன்னா நீங்க கரைல சுகமா சாஞ்சு உக்காந்துட்டு ஜாலியா டீ குடிச்சிட்டே கத்துறீங்க ….பாவம் அவன் ஆத்துல தம் கட்டி வெறும் வயித்தோட நீந்துற பய அவனை பாத்து "டேய் ஏண்டா...கத்துற ..நான் உன்ன மாறியா கத்துறேன்...பாரு எவ்ளோ அமைதியா இருக்கேன் "-ன்னு சொன்னா கேக்கவா போறான். அவனை மொதல்ல வெளிய இழுத்து போடுங்க பாஸ் ….ஒரு டீ வாங்கி குடுங்க .....ஆசுவாச படுத்துங்க அப்புறம் நீங்க சொல்றத காது குடுத்து கேப்பான் . நீங்க ..நான் மாதிரி facebook பாக்க தெரிஞ்ச ஆளுங்க இலவசம் வாங்குறது ரொம்ப கம்மி . காசு வாங்கிட்டு ஓட்டு போடுற கோஷ்டி இன்னமும் அப்புடியேதான் இருக்கு .அது யாருன்னா டிவி ல நியூஸ் அப்புடின்னு ஒன்னு பாக்காம , நியூஸ்பேப்பர் அப்புடின்னு ஒன்னு படிக்காம தான்...