இடுகைகள்

ThathuPitthuvam

ஊக்குவித்தால் ஊக்குவிற்பவன் கூட தேக்கு விற்பான்.
படம்

மல்லி....தேவதைகளின் பூவிது...!!

சிறு வயது முதலே....மல்லிப்பூ பிடிக்கும்.... மல்லிபூவேய்.....!!! தெருக்களில் எதிரொலிக்கும் அவன் அடித்தொண்டை குரல்...!! அம்மா கூப்பிட சொன்னவுடன்....ஓடிபோய் வாசலில் நின்று கொண்டு ... 'ஏய்...மல்லிபூவேய்'.....என்று அதே அடித்தொண்டையில் கிண்டல் தொனிக்க கத்துவதும் பிடிக்கும்...!!! அரும்பு மீசை அரும்பும் போதே....அரும்பும் மல்லி மீது ஆசை...!! என்னவளின் தலைமேல் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டு போகையில் ......என்னை பார்த்து கேலி செய்வது போல் ஒரு மாயை...!! கருவி கொள்வேன் எனக்குள் ....இருடி இரு....ஒரு நாள் நானும்...!!! காதலிக்கும் போது....கீழே உதிரும் அவளின் .....ஒற்றை மல்லியை..திருட்டுத்தனமாய்.....பாட புத்தகத்தில் பாடம் பண்ணி வைத்தது மனப்பாடமாய் இன்றும்... மாற்றான் தோட்டத்து மல்லி ஆனபின்னும் தலை குனிந்து மௌனித்து விட்டு சென்றாள்.... தலை நிறைய மல்லியுடனும் கண் நிறைய கண்ணீருடனும்...... முதலை கண்ணீரை முதன் முதலாய் நேரில் பார்க்கின்றேன்....... அப்போதும் மல்லி என்னை பார்த்தது.....இப்போது கொஞ்சம் அனுதாபத்துடன்......!! முதன்முதலாய் தோன்றியது.....மல்லி தேவ அடியாளின் பூவோவென்று.....!! காலம் க

மல்லி...தேவ அடியாளின் பூவிது...!!

மழலையாக இருந்த போது.... மழலையையும் ‘மண்’ணையும்.... விரும்பினேன்....!! மம்மி தலை மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்...!! பெரியவளாக ஆன போது ...பெரியவளை சற்று கம்மியாக விரும்பினேன்....!! சில வரைமுறைகளினால்.... மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்.....! பெரியவளாக ஆன பின்....மல்லிகையில் மயங்கினேன்....!! பூத்து குலுங்கும் பருவத்தில்...மல்லிகையுடன் முயங்கினேன் ....!! பிறகு...'அது' ஆனது......அதுதான்... அந்த கண்றாவிக்கு மறுபெயர்....'கல்யாணம்'...!! அப்போதும் மல்லியுடன் மணகோலத்தையும் ..... மணவாளனுடனான மனக்கோலத்தையும் விரும்பினேன்...!! மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்.....! ஆனால் இப்போது தான் புரிகிறது....மல்லிகை....ஒரு தேவ...க்களின் பூவென்று...!! இப்படியும் ஒரு அர்த்தம் உண்டா......முதன் முறையாய்....வெறுத்தேன் அந்த மல்லிகையை...!! இன்று பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் சிந்திக்கிடந்த என் கண்ணீர் திவளைகளுடன் விளையாடி விட்டு ...நிமிர்கையில் ... கவனித்தேன்... ஒருவன் மல்லிபூ வாங்கி செல்வதை......அவன் வீட்டில் இன்று ஒரு தேவ....காத்து கொண்டிருக்காள் போல......எண்ண

'சிவ'காமி அத்தை..!!

சிவகாமி அத்தை....!! version 1. Publ ished on 04-03-2010   Version 2.0 20-dec-2015 "செவாமி....அடியே கிழட்டு சிறுக்கி....தெனமும் ஒரு குழுதாடி ( மாடு தண்ணீர் அருந்தும் தொட்டி ) திங்கரீல்ல? சரியா விளக்க மாட்ட...? முறன்ஜோறு (முறம் நிறைய சோறு..) தின்றதுகளுக்கு புத்தி இருக்காது-ங்குறது சரியாதான் இருக்கு...." சகட்டு மேனிக்கு சவட்டி எடுக்கும் பெரியம்மாவின் முறைவாசலுக்கு "இல்லம்மா...நான் நல்லாத்தான் விளக்குனேன்....." என்று மெதுவாக தனக்கு மட்டுமே கேட்கும்   குரல் ஒன்று கொல்லை புரத்தின் ஒரு ஓரத்தில் இருந்து வரும். செவாமி ...சிவாமி...செவகாமி...என்றல்லாம் அழைக்கபடும் சிவகாமி எனும் மூதாட்டியின் குரல். பாட்டி வயது என்றாலும் ... நாங்க அத்த-ன்னு தான் கூப்பிடுவோம் . அத்(தை)த  எங்களுக்கு எப்படி சொந்தம் என்பது...யாருக்குமே தெரியாத ஒரு புதிர்....! ..திடீரென்று...ஒரு நாள் ஞானோதயம் வந்து....அப்பாவிடம் கேட்டால் ஒரு சின்ன புன்னகை மட்டுமே பதில்....வற்புறுத்தினால்....ஒரு நீ..ண்ட உறவுமுறை வெளியே வரும். (இன்போசிஸ் Interview question puzzle  மாறி .... ) 'அதாவது ரா ...எங்க தாத்தாவும்

Introduction

செமஸ்டர் எக்ஸாம் வந்தால் போதும்....எங்களுக்கெல்லாம் ஒரே ஜாலி .... combine study - ன்ற பேரு ல ஒரே லூட்டி தான்...... A short introduction...!! கார்த்திக் @ கடியான் ( ஜோக் எனும் பெயரால் கொஞ்சம் kooda இறக்கம் இல்லாமல் கொடூரமாக கடிப்பான்.....அதுக்கு அந்த நாயே தேவலாம் போல தோனும். But good boy & (Education boy- ஷேன் நல்லா படிக்கிற பசங்கள அப்புடித்தான் சொல்லுவான்...) ரவி @ கிளி @ ஊமை குசும்பன் ( பார்க்க ரொம்ப அமைதி . ஆனால் திடீரென்று கமெண்ட் அடிச்சால் எல்லாம் கதி கலங்கி ஒரு நிமிடம் அமைதி யாகி....பின் வயிறு வெடிக்க சிரிப்போம் . சைலென்ட் கில்லர் ) செந்தில் நாதன் @ சிங்கம்புலி .இவனை பற்றி ஒரு புக் எழுதினாலும் பத்தாது....!நம்ம ஹீரோ கள்ள 'முக்கி'யமானவர்....!! குரு @ கும்மி @ தூங்கமூஞ்சியான்.....காலையிலே பத்தரைக்கு துயில் எழுவாறு ...சாப்பிடுவாரு....தூங்குவாரு...thirumba மதியம் மூணு மணிக்கு சாப்பிட எழுவாறு...தூங்குவாரு....!!நைட் .....appavum தூங்குவாரு.. கடி,கும்மி ,கிளி ,சிங்கம் இது நாளும் தான் ரூம் மேட்டு கள். மத்தது கல்லாம் ஒண்ட வந்த பிடாரிகள் . பிடாரி 1: நான் @muscle man ( கொஞ்சம

அரியும் ஹரியும்

ராமன் ஏன் காட்டுக்கு போனான் ? discussion ஓடிகிற்றுன்தது....!! மாப்ளே ....கல்யாணமான புதுசு .... டீனேஜ் வேற...காட்லே போய் ஹனி மூன் கொண்டாட கிளம்பிருப்பாங்க .....நம்ம இலட்சு....இது புரியாம கரடியாட்டம் வில்ல தூக்கிகினு நானும் அண்ணாகூட போவேன்னு அடம் பிடிச்சு அப்பீட்டு ஆயிகிச்சு....அவனுக்கு பொண்டாட்டி தொல்ல...சரி .....அந்தம்மாவாவது நானும் என் வீட்டுக்காரரோட தான் இருப்பேன்னு பேக்-க தூக்கி கினு கிளம்பிருக்க வேணாம்...? ஒழிஞ்சா போதும்னு விட்ருக்கும்(பக்கத்துல சிவனே னு உக்காந்து , பேந்த பேந்த முழிச்சி கிட்டு நாங்க பேசுறத புரிஞ்சுக்க ட்ரை பண்ணிகிட்டிருந்த ஹரி ய காட்டி ) இவன் பொண்டாட்டியும் இப்படிதாண்டா... இருக்கும்....என்று வழக்கம் போல உசுபேத்தி விட்டான் சந்தானம் . கடுப்பான ஹரி ....உன் பொண்டாட்டி தாண்டா 'ராமரு கூட ஓடி போவா' என்று காட்ட .......ஒரே சிரிப்பு மழை.....!! ஹரி பேரு தான் ஹரியே தவிர ஹரி யை பற்றி ஒன்றும் அறியேன்...!! பாத்ரூம் பழிவாங்கல்....!! ஹரி எப்போ பாத்ரூம் போனாலும் புக்-கொடுத்தான்போவாரு....! உள்ளே போய் என்ன பண்ணுவாருனு ஊருக்கே தெரியும்....! ஆனா ஊருக்கே தெரியும்னு அவருக்கு தெரி