இடுகைகள்

சின்ன சிந்தனை சின்னமனூர் பிரசன்னா ;-)

ஒரு சிறு சிந்தனை .  இது அண்ணனின் பார்வேர்ட்-க்கான  ரிப்ளை-யாக (மட்டும்)கருத தேவை இல்லை .இதோடு புதிய கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது . இது-இந்த சிறுமி காணாமல் போனது - தற்போது நடந்திருக்கலாம் . அல்லது நீண்ட நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் . ஆனால் இது போல் செய்தி போடுபவர் (ஆரம்பித்து வைப்பவர் ) மற்றும் பார்வேர்ட் செய்பவர்கள் தேதி மற்றும் நேரத்தை மறக்காமல் குறிப்பிடவும் .  பிறர்க்கு உடனடியாக உதவும் நல்ல உள்ளம் காரணமாக பதற்றத்தில் தேதி குறிப்பிட மறந்து விடுகிறோம்.  காரணம் ....உடனடியாக  உதவ வரிந்து கட்டி இறங்கும்  பதற்றம்.  தன்னலமற்ற புண்ணியவான்கள் .  கண்டிப்பாக கயிலையில் இடமுண்டு .சிவாய !! ஆனால்  அது என்னவாகிறது எனில் ...இந்த 'காணாமல் போன..' செய்தி இரண்டு வருடமோ அதற்கு மேலுமோ சுற்றிக்கொண்டிருக்கும் . நான் பார்வ்ர்ட் செய்வதற்கு முன் இத்தகைய செய்திகளில் இருக்கும் போன் நம்பர்-க்கு  கால் செய்து உறுதி செய்து கொள்வேன்.  ஏனெனில் நான் அனுப்பும் ஒவ்வொரு குரூப்-பிலும் குறைந்த பட்சம் 500 பேர் இருப்பார்கள்.  நானும் குறைந்த பட்சம் 20 குரூப்-களுக்கு  அனுப்பி விடுவேன் . அதாவது 10000 பேர்களுக்கு

LEO Doubts

I Love LEO - First time. Verithanam. But மக்களே 2nd டைம் லியோ-வ பாத்தீங்க....வேணாம்...அப்புறம் என்னை மாறியே கேள்வி கேட்டு உங்களுக்குள்ளே பேசிகிட்டு 'ங்கெ ங்கெ'-ன்னு காதல் பரத் மாறி வீடு போயி சேர மாட்டீங்க 1. ஒரே கேள்வி தான் . விஜய் த்ரிஷா கிட்ட கதறி அழுவார் 'என்ன நம்பாம என்னை கொன்னுட்டியே-ன்னு ...இதுவரைக்கும் அவரு இப்புடி கதறுனதே இல்லேங்குற லெவெலுக்கு கதறுவாரு ! அப்படியே கிளைமாக்ஸ் சீனுக்கு வாங்க ...'ஹே ...நான் தாண்டா லியோ ' ன்னுட்டு போயிட்டே இருப்பாரு....! இன்னா மாமு லோகேஷ் ...இன்னா இதெல்லாம் ? 2. டைரக்டர் எமோஷனலா கனெக்ட் ஆகாம ஸ்கிரிப்ட் பண்ணா ரசிகர்கள் எப்டி connect ஆவாங்க ? இன்டெர்வல் வரைக்கும் படம் விர்-ன்னு விரையும் ...அதற்கப்புறம் விரையம் தான் 3. சில சீன்கள்ல எதுக்கு இப்போ இந்த ட்ராமா ன்னு நாம confuse ஆயிடுறோம்.... 1. நம்ம கைதி போலீஸ திட்டுற சீன் 2. த்ரிஷா கிட்ட அழுற ஸீன் 3. 5 பேர சுட்டுபுட்டு கே -ன்னு அழுற ஸீன் 4. ஒரு முன்னோட்டம் எதுவும் இல்லாம திடீர்னு நம்ம மடோனா செபாஸ்டியன ட்வின்ஸ் ன்னு காட்றது

43- ல் ஒரு 143 with a 420 !!

  Situation:  Hero got love and break up after his 40's                        43- ல் ஒரு 143... ஒரு 420 யோடு                                                                       அது ஒரு ரணம் ... அது ஆறு சொல்லொணா துயரம் ... அது ஒரு ஆத்ம பரிசோதனை ... தாங்குவதற்கு கல் மனம் வேண்டும் ..! Style -ஆக சொல்ல வேண்டும் என்றால் - Break Up!!   ஒரு ஆணுக்கு எப்போதும் ஒரு பெண் மன/ண ம் தேவைப்படுகிறது ! அது மறுக்கப்படும்போது ... கனமாகி போகின்றது ... பிடுங்கப்படும்போது சினமாகிறது ... நீடிக்கையில் ரணமாகி ...பின் நடை பிணமாகி திரிகின்றது ..!   அவனுள்  இருக்கும் யாழியை சீண்டி பார்க்கிறது ! நகர வாழ்க்கையில் 'I just Broke up' என்று கடந்து போகப்படுவது .... வில்லேஜ் வாழ்க்கையில் 'வைதேகி காத்திருந்தாள்' விஜயகாந்த்-தாக  'உடைத்து ' உட்கார்த்திவிட்டு விடுகிறது. எங்கூரில் அதன் பெயர் 'காதல் தோல்வி ' ... உண்மையில் அது ஒரு காதல் வேள்வி தான் ...மீண்டு வந்தோர் மிகச்சிலரே!!   முன்தினம் காலை வரை பூங்காவனம் போல் இருந்த மொபைல் ... இப்போது  பாலைவனம் போல் .... கல்யாணம் முடிந்த கல்யாண மண்டபம

விகடன் - வாசகர் மேடை பதில்கள்

 5. தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும் ...! 1. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பெற்றோர் சங்கம் . பெற்றோர் சங்கம் நிறைவேத்துற தீர்மானத்தை பள்ளிகள் நிறைவேத்தனும் . இதை கண்காணிக்க  ஒரு அரசு ஆஃபீசர் . நிறைவேத்தலேன்னா அல்லது கால தாமதம் பண்ணினாலோ தண்டனை!  2. தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும்-ங்குறத விட தனியார் பள்ளி பெற்றோர்கள் தான் மாற வேண்டும் . முக்கால்வாசி தப்பு அவுங்கமேல தான் . திருடன் திருடத்தான் செய்வான். அவன கண்டுக்காம போனா கொள்ளை அடிப்பான் . மறுபடியும் கண்டுக்கலையா ...அடுத்தது கொலை தான்.  இறை.ஸ்ரீமதி கேஸ் : இனிமேல் இந்த மாதிரி அக்கிரமம் நடக்காமல் பண்ணலாம்..!   ஒரு பெஸ்ட் ஐடியா..!!   இவ்ளோ பெரிய கலவரம் தேவை இல்லை.   கோபத்தை அமைதியா காட்டுனா போதும் . மனசாட்சி உள்ள பெற்றோர்கள் மனசு வச்சா போதும் .  "  அந்த பள்ளியோட எல்லா மாணவர்களும் ஸ்கூல விட்டு விலகவும் ". அப்படி செஞ்சா இனிமேல் இந்த மாதிரி நடக்கவே நடக்காது     1. பிஜேபி தலைவர்கள்  ... கெட்டப்  வடிவேலு போடுற அத்தனை கெட்டப்புக்கும் இன்ஸ்பிரஷனே பிஜேபி தலைவர்கள் தான் தல ..!!   படித்துறை பாண்டி

Why should I ? - ATTITUDE -எனக்கென்ன வந்துச்சு ?

நாம ஏன் இன்னும் ஊழல் பண்ற ஆளுங்களால ஆள படுறோம் தெரியுமா ? அமெரிக்கா-விட பணப்புழக்கம் இருந்தும் கூட்ட நெரிசல் பஸ் ல சிக்கி ஏன் சாவுறோம் தெரியுமா ?  இந்தியா ஏன் இன்னும் மொன்னையாவே இருக்கு தெரியுமா ? ஒரே விடை தான் :    எனக்கென்ன வந்துச்சு ? நான் ஏன் பண்ணனும் ? Why should I ? - ATTITUDE   காலை  9 மணி. ஒரு நல்ல விஷயம் நீங்க பண்றீங்க. ஒரு கார் காரன் வழி விட்டா ஒரு கைய தூக்கி ஹை தேங்க்ஸ் -அப்படினு சைகை செஞ்சு பாருங்க.  மாலை 7 மணி . வீட்டுக்கு வர்றவரைக்கும் இப்படி தேங்க்ஸ் சொல்லி பாருங்க  உங்கள பாத்து 10 பேரு அதேத செய்வான். அந்த 10 , 100 ஆகும் அது 10000 ஆகும் . அது 10000000 கோடி ஆகும் . ஒரே நாள்ல ஆவாது பட் கூடிய சீக்கிரம் ஆவும். அதேது , கலங்காத்தாலே , அதே கார்காரனுக்கு வழி விடாம முந்திட்டு போங்க (காரோ பைக்கோ ஆட்டோவோ )அவன் அன்னிக்கு பூராம் வேற எவனுக்கும் வழி விட மாட்டான் ) Domino's Effect நாம எல்லோருக்கும் ஒரு ஹீரோ , நம்மள இந்த லஞ்ச ஊழல்ல இருந்து காப்பாத்த வரணும். நாமளும் ஹீரோவா ஆக மாட்டோம், ஆனா ஹீரோ-வா முளை விடுறவன சப்போர்ட்டும்  பண்ணமாட்டோம் . பண்ணாம வேடிக்கை பாப்போம்.    இந்த டிஸ்கவரி நா

தபூ தங்கத்துக்கு போட்டி

 1. காற்றெங்கும் சுகந்தம்  உன்னுடன் பேசி விட்டு வந்தது முதல்.....   2. என்னுடன்பேசும்போதும்...பேசிவிட்டு சென்ற பின்னும்...உன் முகம் ஒரு ரியாக்ஷனும் காட்டுவதில்லை....ஆனால்  உன் தோழி சொல்லி விட்டாள் ....உன் முகத்தை தவிர மற்ற அனைத்தும் படபடப்புக்கு உள்ளாகிறதென்று .....   3. என்னிடம் எத்தனை சட்டை பேண்ட் ....என்ன டிசைன் ....கலர் ...ஞாபகத்தில் ஒன்றாது ஒரு நாளும்..... உன்னுடைய பூப்போட்ட பிங்க் சுரிதாரும் ....கட்டம் போட்ட ரோஸ் கலர் சுரிதாரும் முட்டை வடிவ சிவப்பு துப்பட்டாவும் மனப்பாடம் எனக்கு.... நாளை நீ ...பவனி வர யோசிக்கும் சுரிதார் நிறமும் தெரிகிறதெனக்கு ...!!     4. மில்க் ஸ்வீட்சை நாக்கில் போட்டு கசக்கி முழுங்கி...மீண்டும் நாக்குக்கு கொண்டு வந்து சுவைப்பது.... தயிர் சாதத்தில்...கொஞ்சம் பொரித்த நிலக்கடலை ,கொஞ்சம் எண்ணெய் கத்தரிக்காய் ...கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் .....கலந்து கொக்கைன்  சாப்பிடுவது போன்ற பாவனையில் சாப்பிடுவது .... பசித்தால் டைரி மில்க்கை உரித்து உள்ளே தள்ளுவது .... கலர் கலராக பென் வைத்து கொண்டு ....நோட்ஸ் எடுப்பது... செல் வைத்து கொள்ளாமல் என்னை கொல்வது ... fickle minded ஆக இர

குற்ற உணர்ச்சியும் குறட்டை பணியாரமும்

   குற்ற உணர்ச்சியும்  குறட்டை பணியாரமும்    ஜில்லென்று  காற்றடித்தவுடன் பட்டென்று உன் ஞாபகம் .... மரம் முழுவதும் பூக்கள்  பூத்து குலுங்குவதை பார்த்தால் குலுங்கி சிரிக்கும் உன் முகம்.... மொறு மொறு வென்று ருசியாக எதையாவது தின்றால் ...உனக்கு ஊட்டி விட்டு நீ ரசித்து ருசிப்பதை  பார்க்க வேண்டும் போல இருக்கிறது... எதையாவது ஜில்லென்று  குடித்தால்...உன் வெண்சங்கு தொண்டையில் அது இறங்குவதை ரசிக்க துடிக்கிறது ....  மொத்தத்தில் கொஞ்சம் இன்பமாக இருந்து விட்டால்... உடனே குற்ற உணர்ச்சி வந்து விடுகிறது ....உன்னை விட்டுவிட்டு நான் மட்டும்  இன்பமாக இருக்கிறேனோ என்று.... ஆனால் இது எதுவும் தெரியாமல் ...நீ குறட்டை விடுவதும்...பாணி பூரியை மொக்குவதும் ...கூலர்ஸ் போட்டு கொண்டு ஆட்டோவில் ஊர் சுற்றுவதும்.... வாய் நிறைய பணியாரம் அதக்கி கொண்டு...'இன்னாது ..லவ்-ஆ ...? ஆவாது ஆவாது....பிரண்டு ...இல்லாட்டி எண்டு ...என்று என்னை மிரட்டுவதும்...   Situation: Heroine is a foodie. Hero is in love with her. But she is in dilemma , either to accept him or not. So dodging him. But our hero already got into the love water