கந்தசாமி - கத்திரி தேவை சாமி
கந்தசாமி - இன்னொரு அந்நியன் + ஜென்டில் மேன் ஆக வந்திருக்க வேண்டிய படம். சுசி எதற்காக மூன்றரை மணி நேரம் படத்தை கொடுத்தார் என்று புரியவில்லை. பொறுமை கந்தசாமி-இனும் பெரிது என்று தெரிய வேண்டாமோ .? ஒரு படம் எவ்வளவு வேகம் காட்ட வேண்டும். மீறினால் என்ன ஆகும் என்பதற்கு எடுத்து காட்டு இந்த படம் , 'ஆறு' , 'காக்க காக்க ' எல்லாம் தோத்து போச்சு வேகத்துல. சில நேரம் கண்ணு வலிக்குது பாசு. ஸ்ரேயா ரொம்ப புடிச்சு போச்சோ ? ரொம்ப காட்டிட்டாரு காட்டு காட்டு-னு . எதுக்கு இவ்ளோ வேகம். டைரக்டர் -க்கு வயிறு சரி இல்ல போல ....சீக்கிரம் படத்த முடிச்சிட்டு பாத்ரூம் போகணும் போல-னு தோணுதா இல்லையா.......?? மனசு படத்தோட ஓட்டனும் அதுக்கு சில இடத்துல மெதுவா ஓடனும் . அவ என்ன சொன்னா-னு பக்கத்துல இருக்குற-ஆள்ட்ட கேட்டுட்டு திரும்பினா.... ஒரு பைட் சீன்-முடிஞ்சு பாட்டு ஓடி கிட்டுருக்கு...... பக்கத்துல ஒரு ஆள் என்னடானா....எப்போ விக்ரம்-எ காட்னாலும் சேவல் மாதிரி கூவ ஆரம்பிசுர்றான். நான் இவன பாப்பேனா.....இல்ல ஸ்ரேயா-வா பாப்பேனா....? சுசி எப்பவுமே லாஜிக்கான ஆளு. விரும்புகிறேன் , பைவ் ஸ்டார் , திருட்டு பயலே ,எல்லாம...